நாம் நினைப்பது இந்த உலகில் நடப்பதில்லை. அது கடவுளால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது. கடவுளே உயர்ந்தவர் என்று நினைக்காதவர் இவ்வுலகில் இல்லை.  இவற்றை அறிந்த ஆழ்வார்கள் தங்கள் படைப்பின் மூலம் இறைவனைப் போற்றி பல ஆண்டுகளுக்கு முன்னரே பாசுரங்களின் மூலம் எடுத்துரைத்தனர். ஒவ்வொரு படைப்பும் எதையாவது சொல்லிக்கொண்டே இருக்கிறது. 108 திவ்ய தேசங்களைக் கொண்ட நாலாயிர திவ்யப்பிரபந்தம் மூலம் ஆழ்வார்கள் இறைவனின் முக்கியத்துவத்தை இவ்வலகில் பரப்பச் செய்துள்ளனர். பூமியில், குறிப்பாக இந்தியாவில் நிறைய கோயில்கள் உள்ளன, ஆனால் ஏன் 108 கோயில்கள் மட்டும் திவ்ய தேசமாகக் கருதப்படுகின்றது. ஏனென்றால், திவ்ய தேசத்தில் பாதம் பதிக்கக்கூடிய பக்தர்கள் சொர்க்கத்தில் பிரவேசிப்பதாகக் கருதப்படுகிறது. 108 திவ்ய தேசத்தின் முக்கிய திருத்தலமான ஆண்டாள் கோயிலைப் பற்றிப் பார்த்தோம். இன்றும் 108 திவ்ய தேசத்தில் 61வதாக பங்கு வகிக்கும் திருநீர்மலை ரங்கநாதர் ஆலயத்தைக் காணப்போகிறோம். மேலே உள்ள படத்தில் திருநீர்மலை கோயில் காட்டப்பட்டுள்ளது.

மலைமேல் ரங்கநாதர்

குன்றத்தூர் மலையில் முருகன் இருப்பதை போல் ரங்கநாதரும் மலைமேல் பிரவேசிக்கிறார். கோயிலின் 200 படிக்கட்டுகள் ஏறிப் பக்தர்கள் ரங்கநாதரை அடைகிறார்கள். ரங்கநாதர் சாய்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ரங்கநாதர் பாற்கடலில் வீற்றிருப்பது போல் இத்தலத்தில் காட்சியளிக்கிறார். ரங்கநாதரை தவிர, நரசிம்மப் பெருமாள் மற்றும் உலகளந்த பெருமாள் ஆகிய பெருமாள்களும் இங்கே காட்சி தருகிறார்கள். விஷ்ணுவின் நான்கு அவதாரங்களைத் தரிசித்த பிறகே, ஆழ்வார்கள் திருநீர்மலையை திவ்ய தேசத்தில் சேர்த்திருப்பார்கள் என்ற விடை நமக்குக்  இங்கே கிடைக்கிறது. ரங்கநாதரை வழிபட வரும் பக்தர்கள் கோயிலில் உள்ள ரங்கநாயகி தாயையும் தரிசித்து செல்கின்றனர். கோயிலின் படிகள் மேலே உள்ள படத்தில் கட்டப்பட்டுள்ளது.

நீர்வண்ண பெருமாள்
மலையில் உள்ள மூன்று பெருமாள்களை பக்தர்கள் தரிசிக்கின்றனர். நீர்வண்ணப் பெருமாளை வழிபடக் கோயிலின் அடிவாரத்தில் இறங்குகிறார்கள். இங்குப் பெருமாள் திருப்பதிக்கு நிகரான திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். பக்தர்கள் திருப்பதி மற்றும் ஸ்ரீரங்கத்தில் கிடைக்கும் பலனைப் இங்கே பெறுகிறார்கள். இக்கோயிலில் 2000 ஆண்டுகளாகப் பெருமாள் நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என்று நம்பப்படுகிறது. இக்கோயில் சோழர்களாலும் பாண்டியர்களாலும் கட்டப்பட்டிருக்கிறது. இக்கோயிலில் ராமரையும் நீர்வண்ணப் பெருமாளின் துணைவியார் அணிமலரையும் தரிசிக்கலாம். மேலும் பக்தர்கள் மலையிலிருந்து கீழே இறங்கும்போது ஆஞ்சநேயரை வழிபடலாம். இறுதியாக, திருநீர்மலை சென்னை மாநகர் அருகில் உள்ள திவ்ய தேசங்களில் ஒன்றாகும். ஆழ்வார்களுக்குக் இக்கோயில்பற்றிய எண்ணம் பல ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கிறது. அதோடு நம் மனமும் ஒன்று போகும் என்று நம்புகிறேன். மேலே உள்ள படம் திருநீர்மலையில் உள்ள நீர்வண்ணப் பெருமாளின் கோபுரத்தைக் காட்டுகிறது.

திருநீர்மலை கோயில் நேரம் 
காலை 08.00 மணிமுதல் - மதியம் 1 2.00 மணிவரை 
மாலை 04.00 
மணிமுதல் - இரவு 08.00 மணிவரை 

திருநீர்மலை கோயிலின் சிறப்பு
108ல் 61வது திவ்ய தேசம்

திருநீர்மலை ரங்கநாதர் கோயிலுக்கு எப்படி செல்வது

விமானம் 
சென்னை விமான நிலையத்திலிருந்து 8.2 கிமீ தொலைவில் திருநீர்மலை கோயில் உள்ளது.

ரயில் 
திருநீர்மலை கோவில் குரோம்பேட்டை மற்றும் பல்லாவரம் ரயில் நிலையங்களிலிருந்து சுமார் 6 கிமீ தொலைவில் உள்ளது.

பேருந்து 
திருநீர்மலை ரங்கநாதர் கோயிலின் அருகில் உள்ள பேருந்து நிலையம் திருநீர்மலை ஆகும். சென்னையிலிருந்து குறிப்பாகப் பல்லாவரம், குரோம்பேட்டை மற்றும் தாம்பரம் ஆகியவற்றிலிருந்து
திருநீர்மலைக்கு பேருந்துகள் உள்ளன.

திருநீர்மலை கோயில் அமைந்துள்ள இடம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது