இறைவனை வழிபடும் போது எதுவும் அவசியமில்லை. 12 ஆழ்வார்கள் கடவுளிடம் சரணடைந்து 4000 திவ்ய பிரபந்தத்தை எழுதினார்கள். 7 ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த சாரங்கபாணி கோயிலை காண்கிறோம். எனது முந்தைய பதிவில் சோழர்கள் கும்பகோணத்துடன் எப்படி தொடர்பு கொண்டனர் என்று குறிப்பிட்டேன் . கும்பகோணத்தில் உள்ள பெரும்பாலான கோயில்கள் சிவபெருமானுடையது என்றாலும், வைணவத்தின் பெருமை வாய்ந்த சாரங்கபாணி கோயிலும் இங்கே அமைந்துள்ளது. கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி கோயிலுக்குச் சென்ற நாதமுனியால் திவ்ய பிரபந்தம் இயற்றப்பட்டது. சாரங்கபாணி கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. இது திருப்பதி மற்றும் ஸ்ரீ ரங்கத்திற்கு அடுத்தபடியாக போற்றபடுகிறது. மேலே உள்ள படம் கும்பகோணத்தில் உள்ள, 2000 ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி கோயிலின் ராஜகோபுரத்தைக் குறிக்கின்றது. ராஜகோபுர தோற்றம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் போல் மைந்துள்ளது.

கோயிலின் கதை

பூமியைய் காப்பற்றுவதற்க்காக விஷ்ணு எடுத்த அவதாரங்கள் நிறைய உள்ளன. அது இந்தக் கோயிலில் பிரதிபலிக்கிறது. சாரங்கபாணி கோயிலிலும் இறைவன் பூமிக்கு வந்து லட்சுமி தேவியின் வடிவமான கோமல்லவல்லியை மணந்தார் என்ற கதையை விளக்குகிறது. திருநின்றவூரில் உள்ள இருதயாலீஸ்வரர் கோயில் பற்றிப் பேசும்போது, பூசலார் தன் மார்பில் வீற்றிருக்கும் சிவபெருமானை எப்படி வழிபட்டார் என்பதைப் உணர்தோம். அதேபோல், மகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் குடிகொண்டாள். பிருகு என்ற முனிவர் விஷ்ணுவின் மார்பில் எட்டி உதைக்க, மகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் இருந்து விலகி பத்மாவதி வடிவில் பூமியில் வாழ்ந்தாள். பின்னர் முனிவர் தவறை உணர்ந்து மகாலட்சுமியைய் மீண்டும் விஷ்ணுவுடன் வாழுமாறு வேண்டினார். தனது மகளாகப் பிறக்கும்படி கேட்டார். இறுதியாக, முனிவர் ஹேம ரிஷியாகப் பிறந்து பொற்றாமரி குளத்தில் தவம் செய்தார். கோயிலின் பின்புறம் பொற்றாமரி குளம் உள்ளது. பத்மாவதி கோமல்லவல்லியாகப் பிறந்து விஷ்ணுவின் வடிவமான ஆராவமுதப் பெருமாளை மணந்தாள். வைகுண்டத்தில் இருந்து வந்த பெருமாள், தேருடன் இங்கு தங்கியதால் , ஸ்ரீவில்லிபுத்தூர், திருவாரூரை அடுத்து இங்கு தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கும்பகோணத்தில் மகாமக குளத்திற்குப் பிறகு மிகவும் பிரசித்தி பெற்ற பொற்றாமரி குளம், சிவபெருமான் அடித்த பானையில் இருந்து பறந்து வந்த குளமாக திகழ்கின்றது. எனவே பொற்றாமரி குளம் வைஷ்ணவர்களாலும் மற்றும் சைவ சமயத்தவராலும் போற்றப்படுகிறது. மேலே உள்ள படம் சாரங்கபாணி கோயிலின் பின்புறம் பொற்றாமரை குளம் இருப்பதைக் காட்டுகிறது .

சாரங்கபாணியின் பெயர்

கையில் இருக்கும் வில் சாரங்கபாணியின் பெயரையும் பஞ்சரங்க க்ஷேத்திரங்களில் உள்ள கோயிலையும் குறிக்கிறது. 2000 ஆண்டுகள் பழமையான இக்கோயில் 9 முதல் 10ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த சோழர்களால் கட்டப்பட்டதாகும். திருநீர்மலை கோயிலில் நாம் பார்த்தபடி, சாய்ந்த கோலத்தில் விஷ்ணு பகவான் இங்கு காட்சியளிக்கிறார். இங்கு வரும் பக்தர்கள் கோமல்லவல்லி தேவியைய் தரிசித்துவிட்டு பெருமாளை வழிபடுகின்றனர். திருவிடந்தையில் உள்ள நித்யகல்யாணப் பெருமாள் எப்படி திருமண பிரச்சனைகளை தீர்க்கிறாரோ அதே போல கும்பகோணத்தில் சாரங்கபாணி மகப்பேறு பிரச்சனைகளை தீர்க்கின்றார். சாரங்கபாணியின் அருளால் பிரபந்தங்களை இயற்ற நாதமுனிக்கு நம்மாழ்வார் உதவினார். அது ஆராவமுத பெருமாள் என்று போற்றப்பட வழி வகுக்கிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், கோமல்லவல்லியும் சாரங்கபாணியும் பக்தர்களின் விருப்பங்களையும் தேவைகளையும் பூர்த்தி செய்து வருகின்றனர்.

சாரங்கபாணி கோயில் நேரம் 
காலை 07.00 மணி முதல் மதியம் 12.00 மணிவரை
மாலை 05.00 மணி முதல் இரவு  09.00 மணிவரை

சாரங்கபாணி கோயிலின் சிறப்பு
12வது திவ்ய தேசம்

கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி கோயிலை எப்படி அடைவது

விமானம் 
திருச்சி விமான நிலையம் சாரங்கபாணி கோயிலில் இருந்து 91 கி.மீ தொலைவில் உள்ளது.

ரயில் 
கும்பகோணம் ரயில் நிலையம் சாரங்கபாணி கோயிலில் இருந்து 2 கிமீ தொலைவில் உள்ளது. சென்னையிலிருந்து உழவன் ரயில் மூலம் 
கும்பகோணத்தை அடையாளம்.    

பேருந்து
கும்பகோணம் பேருந்து நிலையம் சாரங்கபாணி கோயிலில் இருந்து 2 கிமீ தொலைவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து சாரங்கபாணி கோயிலுக்கு மினிபஸ்கள் உள்ளன.

சாரங்கபாணி கோயில் அமைந்துள்ள இடம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.