மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், போர்த்துக்கீசியர்களின் கைகள் ஓங்கியபோது சென்னை கடற்கரை நகரிலிருந்து இடம் பெயர்ந்ததை எனது முந்தைய பதிவில் கூறியிருந்தேன். அதே போல் காளிகாம்பாள் கோயில் 1640ல் ஆங்கிலேயர்களின் காலத்தில், செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டியபோது கடற்கரையிலிருந்து இக்கோயிலை இடம் பெயர்தனர். கோயிலின் இடம் மாறினாலும் பக்தி மாறவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. 1983 இல் கட்டப்பட்ட கோயிலின் கோபுரம் மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது.

ஆலயத்தின் வரலாறு

காளிகாம்பாள் கடலோரப் பகுதியில் வசித்து வந்தாள், அவளைச் சென்னியம்மன் என்றும் அழைக்கின்றனர். காமாட்சி காளிகாம்பாளாகவும், சிவபெருமான் கமடேஸ்வராகவும்  பக்தர்களாள் வணங்கப்படுகிறார்கள். இருவரும் தம்பு செட்டி ஜார்ஜ் டவுன் முதல் பிரபஞ்சம்வரை தங்கள் பக்தர்களை ஆசிர்வதித்து வருகின்றனர். மராட்டிய வீரர் சிவாஜி 1667 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி காளிகாம்பாளை வழிபட்டதாக ஆலய வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது, (இது மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது). தேவி காளிகாம்பாள் கடலோரத்தில் வசிக்கும்போது ஆக்ரோஷமான வடிவில் இருந்தாள் பின்னர் இடம்பெயர்ந்தபிறகு சாந்த ஸ்வரூபமாக உருவெடுத்தாள். விஸ்வகர்மா சமூகத்தினரால் கட்டப்பட்ட இக்கோயில் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கும், திருமண தடைகள் உள்ளவர்களுக்கும் உதவுகின்றது, மற்றும் கலைத்துறையில் சாதிக்க நினைப்பவர்களுக்கும் இக்கோவில் அருள் செய்கின்றது. 

ஆலயத்தில் அமைந்துள்ள தெய்வங்கள்

மூவாயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் பிரம்மா, விநாயகர், முருகன், வள்ளி, தேவசேனா, துர்க்கை, ஆஞ்சிநேயர், பரபிரம்மம், நடராஜர், நவகிரகங்கள் ஆகிய தெய்வங்கள் உள்ளன. யாதுமாகி நின்றாய் காளி என்ற வாக்கியத்தினை சுப்பிரமணிய பாரதி காளிகாம்பாளை தரிசித்து எழுதியது என்பது குறிப்பிடதக்கது. காளிகாம்பாள் கோயில் சென்னையில் உள்ள வடபழனி, ப்ரத்யங்கிரா போன்று மிக முக்கியமான கோயில்களில் ஒன்றாகும். இது உங்கள் பயணப் பட்டியலில் நினைவுகளை எழுத வழிவகுக்கிறது.

காளிகாம்பாள் தரிசன நேரம் :
காலை 05.00 மணி முதல் மதியம் 12.00 மணிவரை
மாலை 04.00 மணி முதல் இரவு 09.00 மணிவரை

காளிகாம்பாள் கோயிலில் நடைபெறும் திருவிழாக்கள் :
பிரம்மோத்ஸவம், நவராத்திரி மற்றும் மாசி மகம்.

காளிகாம்பாள் கோயிலுக்கு செல்லும் வழிதடங்கள் :

விமானம் :
சென்னை விமான நிலையம் காளிகாம்பாள் கோயிலிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது. 

தொடர்வண்டி :
சென்னை கடற்கரை ரயில் நிலையம் காளிகாம்பாள் கோயிலிலிருந்து ஒரு கி.மீத்தொலைவில் உள்ளது.

பேருந்து :
சென்னை எழும்பூர், மாம்பலம், நுங்கம்பாக்கம், அடையாறு, மயிலாப்பூர் போன்ற இடங்களிலிருந்து காளிகாம்பாள் கோயிலுக்கு ஏராளமான பேருந்துகள் உள்ளன.


காளிகாம்பாள் கோயில் அமைந்துள்ள இடம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.