தென்னிந்தியாவின், தமிழ்நாட்டில் அமைந்துள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவைப் பற்றிய ஒரு பதிவு. இந்தியாவின் முதல் உயிரியல் பூங்காவான இது 1855 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இனங்கள் ஒன்றாகப் பாதுகாக்க பட வேண்டும் என்பது மெட்ராஸ் மியூசியத்தை சேர்ந்த Dr.Edward Belford என்பவரின் சிந்தைனையே.  இவர் வைத்திருந்த சில விலங்குகள் ஆரம்ப காலத்தில் சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கத்தில் பாதுகாக்கப்பட்டன பின்னாலில் அது Madras Corporationயிடம் வளர்ந்தன. அப்போதைய பிரதம மந்திரியான நேரு அவர்கள் பார்வையிட்டு இதன் பாதுகாப்பு தன்மையைய் பாராட்டினார். பின்னர் Bilogical and behavioral தேவைக்காக வண்டலூர் பூங்கா தேர்ந்தெடுக்கப்பட்டது. இது இந்தியாவின் முதல் உயிரியல் பூங்கா மட்டுமின்றி South East Asiaவின் பழமையான பூங்காவில் ஒன்று. தமிழ்நாட்டில் அமைந்திருப்பது பெருமைக்குரிய விஷயமே. ஆரம்ப காலத்தில் மெட்ராஸ் உயிரியல் பூங்கா என்று அழைக்கப்பட்டு இன்று வண்டலூர் பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது. இந்தப் பழமையான பூங்காவில் நடந்து செல்லும்போது, இங்கிருக்கும் விலங்குகளின் குணாதிசயங்களைக் நாம் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும். அவற்றின் பாசம் மற்றும் இயல்பு காரணமாக, மனிதர்களைவிட விலங்குகள் சிறந்தவை என்று சில நேரங்களில் நாம் உணர முடிகிறது. 1985 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களால் மேம்படுத்தப்பட்டு திறக்கப்பட்டது.

வண்டலூர் உயிரியல் பூங்காவில், அருங்காட்சியகம், குழந்தைகள் பூங்கா மற்றும் மறுவாழ்வு மையம் என்று பெரிய பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தப் பரப்பளவை வைத்து இது இந்தியாவின் மிகப்பெரிய உயிரியல் பூங்கா என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.  வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகள், ஊர்வன மற்றும் பறவைகள் போன்றவை காணப்படுகின்றன. மிருகக்காட்சிசாலையின் நுழைவாயில், கீழே காட்டப்பட்டுள்ளது. அது அற்புதமான செயற்கை நீர்வீழ்ச்சிகளுடன் மக்களை வரவேற்கிறது.
வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு ஆண்டுதோறும் ஏராளமான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர், இது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே வருகிறது, மேலும் மிருகக்காட்சி பூங்காவின் வருவாய், அதன் வளர்ச்சிக்குப் பங்கு அளிக்கிறது. பொதுவாக, ஒவ்வொரு நபரின் ஆர்வமும் விருப்பமும் அவரவர் சொந்த எண்ணங்களைப் பொறுத்து மாறுபடும், இது மக்கள் வெவ்வேறு விலங்குகளைப் பார்க்கச் செல்லும்போது அவற்றைப் பார்க்கவும், அது எப்படி இருக்கிறது என்பதை அறியவும் மக்களை வழி நடத்துகிறது.  இந்தியாவின் மிகப்பெரிய மிருகக்காட்சிசாலையில் காணப்படும் முக்கிய விலங்குகளின் தன்மையை நாம் அறியப் போகிறோம்.
சிங்க ராஜா
பொதுவாக, மிருகக்காட்சி பூங்காவில் சிங்கத்தை ராஜா என்று மக்கள் அழைக்கின்றனர். அதன் பெரிய மார்பு, கழுத்து மற்றும் காதுகளைப் பார்க்கும்போது மக்கள் பயப்படுவார்கள். சிங்கத்திடமிருந்து நாம் என்ன கற்று கொள்ள வேண்டும் என்றால், அது எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் தனியாகச் சமாளிக்க வேண்டும் என்பதை கற்று தருகின்றது. மக்கள் பிரச்சனைகளிலிருந்து விலகி இருக்க விரும்புகின்றனர். ஆனால் சிங்கங்கள் தன்னம்பிக்கை கொண்டவை, அது காட்டில் தனிமையில் இருக்கும். சிங்கம் மனிதனின் பார்வையில் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட விலங்கு ஆனால் மிருகக்காட்சிசாலையில் மிகவும் ஆபத்தான விலங்கு. இந்தியாவில், சிங்கங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது, எதிர்காலத்தில் பார்ப்பதற்கு அரிதாகிவிடும். வண்டலூர் உயிரியல் பூங்காவில் வசிக்கும் ஒரு சிங்கம் மேலே உள்ள படத்தில் காட்ட பட்டுஉள்ளது. வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் காணப்படும் சிங்கம் இப்போது குஜராத்தில் கிர் காடுகளில் மட்டுமே காணப்படுகிறது. மேலும் அது beef with bone, நீலகாய் போன்றவற்றை உணவாகக் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்து 100-119 நாட்கள் கருவுற்ற பிறகு 1 முதல் 5 குட்டிகளை ஈனும். அது தன் ஆயுளை 15 ஆண்டுகள்வரை நீடிக்கிறது 
வெள்ளைப் புலி
மேலே காட்டப்பட்டுள்ள அற்புதமான ஸ்டைலான வெள்ளைப் புலி வண்டலூர் உயிரியல் பூங்காவில் அதிகம் பார்வையிடப்படுகின்ற விலங்குகளில் ஒன்றாகும். வெள்ளைப்புலி தனது வெள்ளை நிறத்தை மக்களுக்குக் காட்டுவது மட்டுமல்லாமல், மக்களின் இதயம் எப்போதும் வெண்மையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. வாழ்க்கை வளைவுகள் மற்றும் சிக்கல்களைக் கொண்டிருப்பதைக் அதன் கோடுகள் மக்களுக்குக் காட்டுகின்றன, மேலும் வெள்ளைப் புலி வங்காளப் புலியின் பிரதிபலிப்பு. ஒவ்வொரு வெள்ளைப் புலிக்கும் வெவ்வேறு விதமான கோடுகள் உள்ளன. அது தான் மக்கள் வெள்ளைப்புலிகளை அதிகமாக நேசிக்கக் காரணமாய் அமைகின்றன. மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ள வெள்ளைப்புலிகள் இந்தியாவில் அரிதாகவே காணப்படுகின்றன. வெள்ளைப் புலியைப் பார்வையிட்டபிறகு, மக்கள் சுத்தமான வெள்ளை இதயத்துடன் செல்கிறார்கள்.
முதலைகள்

பொதுவாக மக்கள் தங்கள் உறவுகளில் ஒற்றுமையாக இருப்பதை நாம் அரிதாகவே காண்கிறோம், ஆனால் இந்த முதலைகள் தங்கள் உறவுகளுடன் ஒற்றுமையாகப் இருக்கின்றன, அந்த ஒற்றுமை மனிதர்களிடம் காணப்படாததால் மக்கள் அதைப் பார்க்கும்போது பொறாமைப்படுகிறார்கள். முதலைகள் மனிதர்களைப் போலவே 100 ஆண்டுகள்வரை வாழக்கூடியது, ஒவ்வொரு முதலைக்கும் அவற்றின் இயல்புக்கு ஏற்ப வெவ்வேறு அளவிலான பற்கள் உள்ளன. முதலைகள் நீர், ஏரிகள் மற்றும் சதுப்பு நிலங்களில் வாழக்கூடியவை, அவை தண்ணீரில் வாழ விரும்புகின்றன, மேலும் அதன் எடை 900 கிலோவுக்கு மேல் இருக்கும், மேலே உள்ள முதலைகள் வண்டலூர் உயிரியல் பூங்காவில் காணப்படுகிறது. மக்கள் இந்த முதலைகளின் கூட்டத்தைப் பார்க்கும்போதெல்லாம், அவர்கள் ஒற்றுமையாக வாழத் தயாராக இருக்க வேண்டும் என்று உணர்கிறார்கள். இந்தியாவின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவில் அமைந்திருக்கும் விலங்குகளைப் பற்றி நாம் நிறைய பார்க்க வேண்டும், எனவே அடுத்த பதிவில் குளிக்கும் வங்கப் புலி, ஆபத்தான இந்திய குவார் மற்றும் கூல் சிம்பன்சியின் குணங்களை பார்க்கலாம்.