சென்னை கிரோம்பேட்டையிலிருந்து சுமார் 2km தொலைவில் அமைந்துள்ளது இந்த குமரன் குன்றம் திருக்கோயில். அஸ்தினாபுரம் என்ற ஊரில் அமைந்துள்ள இக்கோயில் சுமார் நாற்பது வருடங்களுக்கு மேல் பழமையானது. சில நேரங்களில் பெரிய கோயில்களில் இல்லாத சந்தோஷமும் திருப்தியும் கூட இவ்வூரில் உள்ள சிறிய கோயில்களில் தரிசனம் செய்யும் போது ஏற்படுகிறது. முருகப் பெருமான் குன்றின் மீது இருப்பது இங்கே புதிதல்ல. நாம் முதன் முறையாக தரிசனம் செய்யும் போது அவர் புதினாவரே.
120 படிகள் ஏறிய பிறகு நான் கண்ட அந்த தெய்வம் இங்கே சுவாமிநாதனாக காட்சி தருகிறார். மற்றொன்றாக பால வடிவில் இருப்பதால் பால சுப்பிரமணிய சுவாமியாகவும் அருள்பாலிக்கிறார். முருகப் பெருமான் குன்று மீது இருப்பதால் குமரன் குன்றம் என்று இத்திருத்தலம் அழைக்கப்படுகிறது. மலையின்‌ பாதி வழியில் அமைந்திருக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரரும் இக்கோயிலின் மற்றொரு தெய்வம். மலை அடிவாரத்தில் காட்சி தரும் சித்தி விநாயகரின் அருளோடு இங்கே பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
காஞ்சி பெரியோர்கள் இங்கே வரும்பொழுது குன்று மட்டுமே இருந்ததாகவும் பின்னாலில் அவர்கள் ஆனையின்‌ மூலம் குன்று மீது குமரன் அமைக்கப்பட்டது என்றும் தெரிகிறது. பரங்கிமலைக்கும் திருநீர்மலைக்கும் இடையில் குமரன் குன்றம் அமைந்துள்ளது என்று சொல்லப்படுகிறது. தொலை தூரத்தில் இருக்கும் முருகன் கோயிலுக்கு சென்றால் மட்டுமே முருகன் அருள் கிடைக்கும் என்று எங்கும் கூறப்படவில்லை, அந்த நம்பிக்கையின் அடிப்படையிலையே குமரன் குன்றம் கோயிலுக்கு சென்றேன்.

குமரன் குன்றம் கோயில் நேரம்
காலை 6.30 மணி - 11.00 மணி வரை
மாலை 4.30 மணி - 8.30 மணி வரை 

குமரன் குன்றம் கோயிலுக்கு எப்படி செல்வது

விமானம் ✈️
சென்னை விமான நிலையம்.

ரயில் 🚆
தாம்பரம், சானடோரியம் கிரோம்பேட்டை அருகில் உள்ள ரயில் நிலையங்கள் ஆகும். கிரோம்பேட்டை ரயில் நிலையம் சுமார் 2 km தொலைவில் அமைந்துள்ளது.

பேருந்து 🚌
கிரோம்பேட்டையிலிருந்து அஸ்தினாபுரம் செல்லும் பேருந்துகள் குமரன் குன்றம் வழியாக செல்லும். பல்லாவரம், தி.நகர் போன்ற பிற பகுதிகளில் இருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.

குமரன் குன்றம் கோயில் அமைவிடம்