வண்டலூர் பூங்கா அறிமுகத்திலிருந்து தொடங்கி வங்காள புலியைய் அறிந்து கடைசி பாகமாக இந்தப் பறவைகளைக் பற்றி அறிய போகிறோம். இந்தக் கொக்குகள் ஒன்றாக இருப்பதற்கு யார் காரணமாக இருக்க முடியும், வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க யாரும் அதற்க்கு கற்றுக்கொடுக்கவில்லை. குடும்பத்துடன் எப்படி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை மேலே உள்ள படம் விளக்குகிறது. இந்த நாட்களில் கூட்டுக் குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்க விரும்பாத பலபேரின் இடையில், கொக்குகள் கூட்டுக் குடும்பமாக இருப்பது மகழ்ச்சி அளிக்கிறது. அதன் கூட்டத்திலிருந்து ஒன்று கூட அவைகளை விட்டுப் பிரிந்து செல்ல விரும்பவில்லை. மனிதர்கள் உலகில் சுகந்திரத்தை தேடுகிறார்கள் ஆனால் பறவைகளுக்கு அது இயற்கையாகவே அமைகிறது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் காணப்படுகின்றன, ஆனால் வாழ்க்கையில் சுகந்திரமாக இருக்க விரும்பும் பார்வையாளர்களுக்குக் கொக்குகள் உதாரணமாக அமையும். வாழ்வின் சுகந்திரத்தை கற்றுத் தரும் உயிரினங்களில் பறவைகள் விளங்குகின்றது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் பயணிக்கும் ஒவ்வொரு இந்தியனும் இந்தக் கொக்கு கூட்டத்தைப் போலக் குடும்பமாக வாழக் கற்று கொள்ள வேண்டும்.
குழந்தைகள் பூங்கா

பெரும்பாலான பார்வையாளர்கள் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வருகின்றனர். மிருகக்காட்சி சாலை பயணத்தைப் பூங்கா முடித்துவிட்டதாகக் குடும்பத்தினர் நம்புகிறார்கள், ஆனால் குழந்தைகள் இங்கிருந்து பயணம் தொடங்குவது போல் விளையாடுகின்றனர், இது குழந்தைகள் இன்னும் சோர்வடையவில்லை என்பதை பெற்றோருக்கு உணர்த்துகிறது. அவர்கள் தங்கள் குழந்தைகளை என்றென்றும் மகிழ்ச்சியடையச் செய்ய விரும்புகிறார்கள். பூங்காவில் பெற்றோர்கள் நுழையும்போது, ​​அவர்கள், குழந்தையுடன் விளையாடும் போதும் குழந்தைகளாக மாறுகிறார்கள். பறவைகளிடமிருந்து கூட்டுக்குடும்பமாக வாழ்வது எப்படி என்றும் வங்கப்புலி எப்படி உலகை மறந்தது நீந்தியது என்றும் பல நல்ல பழக்க வழக்கங்களை விலங்குகளிடமிருந்து நம் கற்றுக்கொண்டோம். இறுதியாக வண்டலூர் உயிரியல் பூங்கா நம் வாழ்வில் மறக்க முடியாத தருணங்களைத் தருகிறது, மக்கள் தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது குழந்தைகளுடன் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்குச் செல்ல வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை.

வண்டலூர் உயிரியல் பூங்கா நேரம் 

காலை 9.00 மணி முதல் மலை 5.00 மணிவரை 

விடுமுறை நாள் 

செவ்வாய் 

வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு எப்படி செல்வது

விமானம் 
வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அருகில் உள்ள விமான நிலையம் 15 கிமீ தொலைவில் உள்ள சென்னை விமான நிலையம் ஆகும். மேலும் சென்னை விமான நிலையத்திலிருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.

ரயில் 
வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அருகில் உள்ள ரயில் நிலையம் வண்டலூர் ரயில் நிலையம் ஆகும், இது 1 கிமீ தொலைவில் உள்ளது. சென்னை சென்ட்ரல், சென்னை பீச் மற்றும் தாம்பரத்திலிருந்தும் ரயில் வசதிகள் உள்ளது.  

பேருந்து 
வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அருகில் உள்ள பேருந்து நிலையம் வண்டலூர் பேருந்து நிலையம் ஆகும், 
வண்டலூர் பூங்காவிலிருந்து 100 mtrs அருகிலேயே பேருந்துகள் நின்று செல்லும். சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான MTC பேருந்துகள் வண்டலூர் பூங்காவை இணைகின்றன. 

அண்ணா அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அமைந்துள்ள இடம் கீழே