வேல மரங்கள் நிறைந்த காடாக இருந்ததால் அதற்கு வேலூர் எனப் பெயர் வந்தது. நான் ரத்தினகிரி முருகனையும், ஏலகிரி மலையும் பார்த்தபிறகு இவ்விடத்தை எப்படி மரங்கள் இல்லாத மலைகள் என்று சொல்ல முடியும் என்பதை நினைத்து வேதனையடைந்தேன். அப்படித்தான் வேலூரில் உள்ள ஐலகண்டேஸ்வர் கோயிலும் ஒரு காலத்தில் சாமி இல்லாத கோயில் என்று அழைக்கப்பட்டது. ஏழு முனிவர்களின் பின்னால் அமைந்த கதையின் ஆரம்பம் அது. வேலூர் கோட்டைக்குள் வடக்கில் அமைந்த இத்திருத்தலம் இந்திய தொல் பொருள் துறையின் கீழ் பராமரிக்கப்படுகிறது.

ஐலகண்டேஸ்வர் பெயர் 
வசிஷ்ட்டர், அகத்தியர், கெளதமர், பரத்வாசர், வால்மீகி, காசியபர் ஆகிய ஆறு முனிவர்கள் வேலூரை சுற்றி உள்ள பகுதிகளில் சிவலிங்கத்தை வைத்து வழிபட்டனர். அத்திரி என்ற முனிவர் மட்டும் வேலூரிலையே லிங்கத்தை வைத்து வழிபட்டார். இவ்ஏழு முனிவர்களும் அவ்விடத்தை விட்டுச் சென்றபிறகு, அத்திரி முனிவரால் வழிப்பட்ட சிவலிங்கம் மட்டும் பாலாற்றில் ஏற்ப்பட்ட வெள்ளம் மூலம் மண் மூடிக்கிடந்து, சுற்றி ஐலத்துடன் காணப்பட்டதால் அவ்விடமே இன்று ஐலகண்டேஸ்வர் திருத்தலம் என்று அழைக்கப்படுகிறது. நாம் எந்தக் கோயிலைத் தரிசனம் செய்தாலும் அதைச் சுற்றி பல வரலாற்று கதைகள் அமைந்திருக்கும், அது வேலூர் ஐலகண்டேஸ்வர் கோயிலுக்கும் பொருந்தும். இதன் மற்றொரு புராணமாக, ஆந்திராவை சேர்ந்த பொம்மி ரெட்டி, திம்மி ரெட்டி சகோதரர்கள் வேலூரில் தங்கியிருந்தனர். பொம்மி ரெட்டியிடம் இருந்த ஐந்து கறவை காம்புகளை கொண்ட பசு மேய்ச்சலுக்கு சென்று வற்றிய மடியுடன் திரும்பியது. இதில் சந்தேகம் அடைந்த பொம்மி ரெட்டி பசுவைப் பின் தொடர்ந்து பார்த்தபோது, அங்கே புற்று ஒன்றிலிருந்து ஐந்து தலை நாகம் வெளிவந்து பசுவின் ஐந்து காம்புகளை பிடித்துப் பால் உருஞ்சியது. இதைப் பார்த்த பொம்மி ரெட்டி அதிர்ச்சியானன்.  அன்றிரவு பொம்மி ரெட்டி கணவில் தோன்றிய இறைவன் புற்று இருக்கும் இடத்தில் தனக்கு கோயில் கட்டுமாறு கட்டளையிட்டான். அதுவே ஐலகண்டேஸ்வர் கோயில் என்றும் சொல்லப்படுகிறது. 

பக்தி போராட்டம் 
நம் நாட்டில் எத்தனையோ கோயில்கள், வளங்கள் என்று பாதுகாக்கப்படாமல் அழிந்துப் போயிருக்கின்றன, இன்று கணினியில் சேகரிக்கப்படும் அனைத்தும் பிற்கால சங்கத்தினருக்கு பாடமாக அமையும் என்பதே உண்மை. முன்னொரு காலத்தில் சேகரிக்கப்படாமலும் எவ்வளவோ தகவல்கள் அழிந்துப் போயிருக்கின்றன. அப்படியே ஐலகண்டேஸ்வர் கோயிலின் சிவலிங்கம் பல ஆண்டுகளாகச் சத்துவாச்சாரியில் இருந்தன. இதற்கான காரணம் என்ன என்று தெரியாமலே போயிற்று. இதுவே சாமி இல்லாத கோயில் என்று சொல்லப்பட்டது. ஆனால் பல நாட்களின் போரட்டமும், பல அறிஞர்களின் சிந்தனையுமே மீண்டும் சிவலிங்கம் கோயில் கருவறைக்குள் வந்து சேர்ந்தது. இந்தப் பக்தி போராட்டம் 1928 முதல் 1981 ஆம் ஆண்டுவரை நடந்தேறியது. ஐலகண்டேஸ்வர் கோயில் 1566 ஆம் ஆண்டு பொம்மி ரெட்டி என்பவரால் கட்டப்பட்டாலும் அதன் சுற்று வட்டாரம் 13 முதல் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. அது விஜயநகரப் கட்டிடகலையோடு தொடர்புடையது என்றும் அறியப்படுகிறது. ஐலகண்டேஸ்வர் கோயிலின், ஏழு நிலை செங்கள் சுதையினால் எழுப்பப்பட்ட முதல் கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றபோது என் மனம் ஏழு நிலைகளைக் கொண்டு மேலோங்கியது.

ஐலகண்டேஸ்வர் கோயில் நேரம்
காலை 6.30 மணி முதல் மதியம் 1.00 மணிவரை
மாலை 3.00 மணி முதல் இரவு 8.30 மணிவரை 

ஐலகண்டேஸ்வர் கோயிலின் வழி

விமான வழி
125 km தொலைவில் சென்னை விமான நிலையமும், சுமார் 215 km தொலைவில் பெங்களூர் விமான நிலையமும் அமைந்துள்ளது. திருப்பதி விமான நிலையம் சுமார் 128 km தொலைவில் அமைந்துள்ளது.

ரயில் வழி
ஐலகண்டேஸ்வர் கோயிலிலிருந்து காட்பாடி ரயில் நிலையம் சுமார் 7 km தொலைவிலும், வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையம் 2 km தொலைவிலும் அமைந்துள்ளது.

பேருந்து மற்றும் சாலை வழி
வேலூர் பேருந்து நிலையம் ஐலகண்டேஸ்வர் கோயிலிலிருந்து 3 km தொலைவில் அமைந்துள்ளது. சென்னை, பெங்களூர், திருப்பதி சாலை வேலூரை இனனகின்றன.

ஐலகண்டேஸ்வர் கோயில் அமைவிடம்