14 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்தே ஏலகிரி மலைக்குச் செல்ல வேண்டும். எனக்கு மட்டும் விதிவிலக்கா என்ன ? திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்த அழகிய மலைகளின் தொடர்ச்சியே இந்த ஏலகிரி மலை. இங்கிருக்கும் சுற்றுலா தளங்களைப் பார்வையிடும்போது இதுவே ஏழைகளின் ஊட்டி என்று நான் நம்பினேன். சாதாரண மக்களும் குறைந்த விலையில் பயணம் செய்யும் ஒர் அழிகிய மலை. ஜமீன்தார்கள் கைவசம் இருந்த ஏலகிரி அரசுடமையாக மாறி, இன்று தமிழ் நாட்டில் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக மாறியுள்ளது. அவற்றில் ஐந்து சிறந்த இடங்களைப் பற்றிப் பார்ப்போம்.
அத்தனாவூர் மலை சரிவில் அமைந்த இக்கோயிலில், பெருமாள் கல்யாண வேங்கடரமண சுவாமியாகவும் மகாலட்சுமி ஏலகிரி தாயாரகவும் காட்சி தருகின்றனர். ஆண்டாலுக்கு தனி சந்நிதியும் இங்கே காணலாம். ஆழ்வார்களுக்குத் தனி சிலைகள் அமைந்திருப்பது சிறப்பு. ஏலகிரிக்கு சுற்றுலா வரும் மக்கள் முதலில் பெருமாளை தரிசித்த பின்னரே மற்ற இடங்களுக்குச் செல்கின்றனர்
Temple Timings
7.00 AM TO 12.00 PM
4.00 PM TO 07.00 PM
7.00 AM TO 12.00 PM
4.00 PM TO 07.00 PM
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்று ரத்தினகிரி முருகன் கோயில் எனக்கு நினைவுப்படுத்தியது. அந்தத்தொடர்பு ஏலகிரி முருகன் கோயிலோடு என்னை சம்பந்தப்படுத்திக்கொண்டது. தமிழ் கடவுளான முருகனுக்கு எங்கே போனாலும் கோயில் இருப்பது என்னுடைய முந்தைய பதிவுகளான திருத்தணி, திருச்செந்தூர், குன்றத்தூர், சிருவாபுரி, ஆண்டார்குப்பம் முருகன் கோயில்களே சான்று. வேலவன் முருகன் கோயில் என்று அழைக்கப்படும் இத்திருத்தலத்தில் பிள்ளையார் மற்றும் நவக்கிரக சன்னதியும் அமைந்துள்ளது.
Temple Timings
6.00 AM TO 8.00 PM
6.00 AM TO 8.00 PM
ஏலகிரியில் மரங்கள் மலைகளோடு தொடர்பில் இருப்பது போல், பறவைகள் மனிதர்களோடு தொடர்பில் இருப்பதை நாம் இந்தப் பறவைகள் பூங்காவில் உணரலாம். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் sunflower விதைகளை வைத்துப் பறவைகளைத் தன் வசப்படுத்திக் கொள்கிறார்கள். பறவைகளைத் தவிர முயல்கள், கோழிகள் இருப்பதும் தனிச்சிறப்பு. ஏலகிரிக்கு சுற்றுலா வரும் மக்கள் Birds Park ஒரு மறக்க முடியாத தருணத்தைத் தருவதாக நம்புகிறார்கள்.
மனிதன் இவ்வுலகில் உயிர் வாழும் வரை இயற்கையோடு இணைந்து இருக்க வேண்டும் என்பதே பரவலான கருத்து. அக்கருத்துக்கு பல உதாரணங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த ஏலகிரி Nature Park. நீரின்றி அமையாது உலகு என்ற திருவள்ளுவருக்கு சிலை இந்த இயற்கை பூங்காவில் அமைந்துள்ளது. அதன் சான்றாக ஒரு செயற்கை நீர்வீழ்ச்சியும் அமைந்துள்ளது. பூக்களும், பலா மரங்களும் நிறைந்த இந்தப் பூங்கா 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
Park Timings
9.00 AM TO 7.00 PM
9.00 AM TO 7.00 PM
புங்கனூர் ஏரியில் பயணம் செய்வதே ஏலகிரி Boating எனப்படுகிறது. Row Boat, Pedal Boat எனத் தங்கள் விருப்பப்படி மக்கள் படகு சவாரியய் தேர்வு செய்கிறார்கள். நான் இங்கிருக்கும் படகில் பயணம் செய்யும்போது மலைகளும் ஏரிகளும் என்னுடன் தொடர்பில் இருப்பதாக நம்பினேன். நாம் இந்த உலகில் எங்குச் சென்றாலும் அந்த இடத்தோடு நம்மைத் தொடர்புப்படுத்தி கொள்ள வேண்டும். அப்படியே என்னை இந்த இடங்களோடு இனைத்து கொண்டேன்.
Boating Timings
8.00 AM TO 6.00 PM
ஏலகிரியில் உள்ள மற்ற இடங்கள்
சுவாமிமலை
நிலாவூர்
ஐலகம்பாறை
அரசு மூலிகை பன்னை
சாகசப் பூங்கா
ஏலகிரியில் உள்ள மற்ற இடங்கள்
சுவாமிமலை
நிலாவூர்
ஐலகம்பாறை
அரசு மூலிகை பன்னை
சாகசப் பூங்கா
ஏலகிரியில் என்ன வாங்கலாம்
பலாப்பழம்
ஏலகிரிக்கு எப்படி செல்ல வேண்டும்
விமானம் மூலம்
180 KM தொலைவில் பெங்களூர் விமான நிலையமும், சுமார் 215 KM தொலைவில் சென்னை விமான நிலையமும் அமைந்துள்ளது.
ரயில் மூலம்
ஜோலார்பேட்டை ரயில் நிலையம் 19 KM தொலைவிலும், வாணியம்பாடி ரயில் நிலையம் 24 KM தொலைவிலும், திருப்பத்தூர் ரயில் நிலையம் 27 KM தொலைவிலும் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து ஜோலார்பேட்டைக்கு ஏலகிரி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது.
பேருந்து மூலம்
சென்னை, ஜோலார்பேட்டை, வேலூர், சேலம், பெங்களூர், ஒசூர் மற்றும் கோயம்பத்தூரிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. சென்னை-வேலூர்-வாணியம்படி சாலை வழியாக ஏலகிரி மலையைய் அடையலாம்.
ஏலகிரி மலை அமைவிடம்
பலாப்பழம்
ஏலகிரிக்கு எப்படி செல்ல வேண்டும்
விமானம் மூலம்
180 KM தொலைவில் பெங்களூர் விமான நிலையமும், சுமார் 215 KM தொலைவில் சென்னை விமான நிலையமும் அமைந்துள்ளது.
ரயில் மூலம்
ஜோலார்பேட்டை ரயில் நிலையம் 19 KM தொலைவிலும், வாணியம்பாடி ரயில் நிலையம் 24 KM தொலைவிலும், திருப்பத்தூர் ரயில் நிலையம் 27 KM தொலைவிலும் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து ஜோலார்பேட்டைக்கு ஏலகிரி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது.
பேருந்து மூலம்
சென்னை, ஜோலார்பேட்டை, வேலூர், சேலம், பெங்களூர், ஒசூர் மற்றும் கோயம்பத்தூரிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. சென்னை-வேலூர்-வாணியம்படி சாலை வழியாக ஏலகிரி மலையைய் அடையலாம்.
ஏலகிரி மலை அமைவிடம்