பழமையான, தொன்மையான வார்த்தைகளைக் கேட்டறிதல் மூலம் நம் மனம், அதில் பயணிக்க விருபப்படுகிறது. அதுவே திருப்பாச்சூர் சிவன் கோயிலை நான் தரிசிக்க காரணமாயிற்று. தொன்று தொட்டு வரும் பாரம்பரிய சித்திரங்களையும், சுவர்களையும் பார்க்கும்போது கலையின் மீது உள்ள ஆர்வம் அதிகரிக்கிறது. அப்படியே இக்கோயிலும் அதற்கு நிகராக அமைகின்றது. மேலே உள்ள படம் கோயிலின் ராஜகோபுரம்.
கரிகால சோழன்
கோயில் கட்டுமானம்பற்றிச் சரியான தகவல்கள் இல்லையெனில் கூட இது கரிகால சோழனால் கட்டப்பட்டிருக்க கூடும் என்று நம்பப்படுகிறது. ஒரு காலத்தில் மூங்கில் நிறைந்த காடாக இருந்த இவ்விடத்தில் பசு ஒன்று மேய்ச்சலுக்கு வந்தது, அப்பசு குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் நின்று பால் தந்ததால் அவ்விடத்தை தோண்டி பார்க்கும் படி இங்கிருந்த மன்னன் ஒருவன் ஆனனயிட்டான்.வாசி என்னும் கருவியோடு தோண்டும்போது மண்ணுக்குள் இருந்து ரத்தம் வரத் தொடங்கியது. சிவபெருமான் சுயம்பு லிங்கமாக இருந்ததை பார்த்து மன்னன் அதிர்ச்சியானன். மறுநாள் மன்னனின் எதிரிகள் ஒரு பாம்பைக் குடத்துக்குள் வைத்து மன்னனிடம் தந்தனர். மன்னன் குடத்தை திறப்பதற்குள் அங்கு வந்த பாம்பாட்டி அதை வாங்கி சென்றான். பின்னர் மன்னனின் கனவில் வந்த சிவ பெருமான், மண்ணுக்குள் புதைந்திருந்ததையும், பாம்பாட்டியாக வந்ததும் தாமே என்றும், தனக்கு கோயில் கட்டவும் கட்டளையிட்டார். வாசி என்னும் கருவியால் தோண்டப்பட்டதால் இதற்கு வாசீஸ்வரர் என்று பெயர் அமைந்தது.
கோயில் சிலைகள்
அரக்கர்களிடமிருந்து வேதத்தை மீட்ட விஷ்ணுவுக்கு தோஷம் பிடித்த காரணத்தால், இத்தலத்தை வழிப்பட்டதாகவும் புராணம் எடுத்துரைக்கிறது. 276 பாடல் பெற்ற ஸ்தலத்தில் சேர்க்கப்பட்ட இக்கோயில் தேவார பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவன் வாசீஸ்வரராகவும் பார்வதி தங்க தாலி அம்மனாகவும் அருள, விநாயகர், தட்சிணாமூர்த்தி, நடராஜர் என்று மற்ற தெய்வங்களும் சிலைகளின் அம்சம். கருவறையில் உள்ள வெட்டுப்பட்ட சிவலிங்கத்தை பார்க்கும்போது வாசி என்னும் கருவியால் தோண்டப்பட்டது நினைவுக்கு வருகிறது. இதன் காரணமாகவே சிவலிங்கத்தை தொடாமல் பூஜைகள் நடப்பது இங்கே தனி சிறப்பு.
கோயில் நேரம்
காலை 6.00 மணி முதல் 12.00 மணிவரை
மாலை 4.00 மணி முதல் 8.00 மணிவரை
கோயில் சிறப்பு
வெட்டுப்பட்ட சிவலிங்கம்
திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோயிலுக்கு எப்படி செல்வது
விமானம்
சென்னை விமான நிலையம் திருவள்ளுரிலிருந்து 47 km தொலைவில் அமைந்துள்ளது.
ரயில்
திருப்பாச்சூர் வாசீஸ்வர் கோயிலுக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் சுமார் 6 km தூரத்தில் உள்ள திருவள்ளூர் ரயில் நிலையம். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறநகர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் திருவள்ளுர் ரயில் நிலையத்தை இனைகின்றன.
பேருந்து
சென்னை மற்றும் திருவள்ளுரிலிருந்து திருப்பாச்சூருக்கு பேருந்து வசதிகள் உள்ளன. கடம்பத்தூர் சாலை திருப்பாச்சூர் செல்ல வழி வகுக்கிறது.
திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோயில் அமைவிடம்