ஏழுமலையான் என்ற பெயரை சொன்னவுடன் நமக்கு நினைவுக்கு வருவது திருப்பதி வெங்கடாசலபதியின் தோரனையே. திருமலையில் உள்ள இந்த ஏழுமலையானை தரிசிக்க ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர், தென்னிந்தியா மட்டுமின்றி வடமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் பல வசதிகளை மேம்படுத்திக் கொண்டு வருகின்றது. அவற்றை இனனயதள வாயிலாகவும் மற்றும் mobile app வழியாகவும் வழங்கி வருகிறது. இதில் முக்கிய அம்சமாக திருமலையில் உள்ள தங்கும் விடுதிகளை நம்மால் புக் செய்ய முடியும்.
வராக சுவாமி ஓய்வு இல்லம் - 1
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் பல்வேறு தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் பல கோயில் அருகாமையிலும் மற்றும் சுற்று வட்டாரத்திலும் அமைந்துள்ளது. இதற்கு முக்கிய எடுத்துக்காட்டாக வராக சுவாமி ஓய்வு இல்லம்(1) மிக அருகில் அமைந்துள்ளது. கோயில் குலம் அருகே அமைந்துள்ள வராக சுவாமியின் பெயரே இந்த rest houseக்கு வைக்கப்பட்டுள்ளது. 100 ரூபாய்க்கு ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இங்கே தங்க இடம் அளிக்கப்படுகிறது. அண்ண பிராசாத மண்டபத்தை கடந்து கோயில் செல்லும் போது அமைந்திருக்கும் படிக்கட்டில் ஏறி மேலே சென்றால் இந்த வராகசாமி Rest House(1) வழியைய் அடையலாம். கோயிலின் முன் கோபுரத்திலிருந்து கிழக்கு மாதா சாலை வழியாகவும் இந்த படிக்கட்டுகளை காண முடியும். அண்ண பிராசாத மண்டபம் தவிர பிற உணவு கடைகளும், பஸ் வசதியும் வராக சுவாமி ஓய்வு இல்லம் பக்கத்திலியே அமைந்துள்ளது. 300 ரூபாய்க்கான சிறப்பு தரிசனம், Senior Citizen, சுபதம் நுழைவாயில், என அனைத்தும் இங்கிருந்து பக்கமே. 

குறிப்பு: 
வராக சுவாமி ஓய்வு இல்லம் I மற்றும் வராக சுவாமி ஓய்வு இல்லம் II என இரண்டு இல்லம் அமைந்து இருக்கிறன. இங்கே கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் வராக சுவாமி ஓய்வு இல்லம் I மட்டுமே.