மனிதர்கள் எப்படி ஒரு இடத்தில் குடி கொண்டு பல இடத்திற்கு சுற்றி வருகிறார்களோ அப்படித்தான் இந்தக் கோயிலின் அங்காள பரமேஸ்வரியும். மேல்மலையனூரில் முதல் சக்தி பீடமாய் அமைந்து சுற்றி உள்ள பகுதிகளில் வளம் வந்த ஆரம்பமே இந்த இராமாபுரம் புட்லூர் பூங்காவனத்தம்மனின் விலாசம். 
மாமரம், வேப்பமரம், பனைமரம் என்று வனம் நிறைந்த காடாக இருந்த இவ்விடத்திற்கு வந்த அங்காள பரமேஸ்வரி இளைப்பாறும்போது, தண்ணீர் தாகம் எடுக்கச் சிவ பெருமானிடம் தண்ணீர் எடுத்து வரும்படி கூறினாள். நந்தி பகவானை காவல் நிறுத்திவிட்டு சென்ற சிவபெருமானின் பாதம் பட்டதும், அருகில் இருந்த ஆற்று நீரும் கரைபுரண்டோடியது. வெகுநேரம் ஆகியும் சிவபெருமான் திரும்பி வராததால், அம்மனும் இவ்விடத்தில் மல்லாக்க படுத்தாள். திரும்பி வந்த சிவப்பெருமானும், அம்மன் மண் புற்றாக மல்லாக்க படுத்திருப்பதை பார்த்து உடன் நின்றார். பின்னாளில் உழவனின் ஏர் கலப்பை மண் புற்றின் மீது பட, ரத்தம் வரத் தொடங்கியது. அருகில் இருந்தவர்களும், உழவனும் பார்த்து அதிர்ச்சியாகினர். பின்பு ஒரு கிழவியின் மீது வந்த அம்மன், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியாக இங்கே மல்லாக்க அமர்ந்து இருக்கின்றேன் என்றும், தனக்கு கோயில் கட்டும்படியும் கட்டளையிட்டாள். உழவன் தன் தவறை உணர்ந்ததால் அம்மனும்‌ அவனைத் தனக்கு பூசாரியாக இருக்கும் படி ஆனையிட்டால்‌. வனங்கள் நிறைந்த பகுதியில் இளைப்பாறியதாள் இவள் பூங்காவனத்தம்மன் என்றும் அழைக்கப்படுகிறாள். 
சிவன் சக்தியாக நந்தி பகவானோடு அருள் புரிவது சிறப்பு. கடவுளை நோக்கிச் செல்லும்போது, நமக்கு என்ன பலன் கிடைக்கும் என்று நம் மனம் எண்ணி கொண்டே இருக்கும். இது கோயில்களுக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கும். அம்மன் இங்கே  இயற்கயாகவே நிறைமாத கர்ப்பிணியாக மல்லாக்க படுத்திருப்பதினால், புட்லூர் அங்காள பரமேஸ்வரி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிட்டுகிறது.

புட்லூர் கோயில் நேரம்
காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 மணிவரை
மதியம் 2.00 மணி முதல் இரவு 7.30 மணிவரை

புட்லூர் கோயில் சிறப்பு
குழந்தை பாக்கியம்

புட்லூர் கோயிலுக்கு எப்படி செல்வது.

விமானம்
சென்னை விமான நிலையம் சுமார் 40 km தொலைவில் புட்லூர் கோயில் அமைந்துள்ளது.

ரயில்
புட்லூர் கோயில் சுமார் 1.5 km தொலைவில் புட்லூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது.

பேருந்து மற்றும் சாலை
இராமபுரம் மற்றும் காக்களூர் பேருந்து நிலையத்திலிருந்து சாலை வழியாக புட்லூர் அங்காள பரமேஸ்வரி கோயிலை அடையலாம்.

புட்லூர் பூங்காவனத்தம்மன் அமைவிடம்.