நாம் எந்த ஒரு பயணத்தை மேற்கொண்டாலும் அப்பயணத்தை கடவுளோடு இனைத்திட வேண்டும். அதுவே போகும் பாதை தவறாக இருந்தாலும் போய்ச் சேரும் இடம் கோயிலாக இருக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் அமைகிறது. திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலுக்கு நான் சென்றபின், சனிக்கிழமை அன்று பெருமாளை தரிசிக்க அதிகமான மக்கள் இங்கே வருவதை நம்பினேன். விஷ்ணுவின் பிரதிபலிப்பாக அருள் புரியும் வீரராகவ பெருமாளும், லக்ஷ்மியின் வடிவமாக அருள் புரியும் கணக வள்ளி தாயாரும் இந்தத் திருவள்ளூர் நகரின் மிகப் பிரபலமான தெய்வங்களாகக் கருதப்படுகிறார்கள்.
 
கோயிலுக்கு உள்ளே இருக்கும் எந்த ஒரு தெய்வத்தை நாம் வழிப்படும் போதும் அதற்கு ஒரு சக்தி இருப்பதாக உணர்கிறோம். அந்தச் சக்திக்குப் பின்னால் ஒரு வரலாற்று உண்மையும் இருப்பதாக உணர்கிறோம். அதற்குத் திருவள்ளூர் வீரராகவ கோயிலும் விதிவிலக்கு அல்ல என்பதை நினைவு கூறும் வகையில் அமைந்துள்ளது. முனிவர் ஒருவர் இக்கோயிலின் அருகில் ஒரு வருட காலமாகத் தவமிருந்தார். பின்னர் தை மாதம் ஒரு நாள் கடவுளுக்குப் படைத்த மாவை கொடுப்பதற்காகக் காத்திருந்தார். அங்கே வந்த கிழவர் ஒருவர் அதைக் கேட்க முனிவரும் அவரிடம் மாவை கொடுத்தார்.பின்பு மிண்டும் கிழவர் மாவை கேட்க முனிவர் இல்லை என்று கூறினார். அதன் பின்னர் ஒரு வருடம் கழித்து மீண்டும் முனிவர் சாமிக்குப் படைத்த மாவை எடுத்து வைக்க, அதே பிராமண கிழவர் அங்கே வந்தார். அதேபோல் மாவை சாப்பிட்ட பிராமண கிழவர், எவ்வுள் என்று கேட்க முனிவரும் இங்கே படுக்கும் படி கூறினார். அதுவே சயண கோலத்தில் காட்சி அளிக்கும் வீரராகவ பெருமாள் என்று சொல்லப்படுகின்றது, முனிவருக்கு வரமளித்த காரணத்தால் பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வைக்கிறார். இதுவே வைத்திய வீரராகவ பெருமாள் என்று அழைக்கப்பட காரணமாயிற்று.
 
சுமார் 5000 வருடம் பழமையான இத்திருக்கோயில் பல்லவர்கள், சோழர்கள், தஞ்சை நாயக்கர்கள் என்று பல்வேறு காலக்கட்டத்தில் வாழ்ந்த அரசர்களால் மேம்படுத்தப்பட்டுள்ளது. கணகவள்ளி தாயார், ஆண்டாள், ராமருக்குமான தனி சந்நிதியோடு இக்கோயில் அமைந்துள்ளது. ராமானுஜரின் வாழ்க்கை தத்துவத்தைப் போதிக்கும் சந்நிதியும் இங்கே சிறப்பு. திருவள்ளூரில் உள்ள வீரராகவ கோயில் தொண்டை மண்டலத்தில் உள்ள புகழ்பெற்ற திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.

வீரராகவ கோயில் நேரம்
காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணிவரை
மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணிவரை

திருவள்ளூர் வீரராகவ கோயிளுக்கு செல்லும் வழி

விமானம்
திருவள்ளூர் வீரராகவ கோயில் சென்னை விமான நிலையத்திலிருந்து 47 km தொலைவில் அமைந்துள்ளது.

ரயில்
வீரராகவ கோயில் திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 3 km தொலைவில் அமைந்துள்ளது.

பேருந்து
தேரடி மற்றும் திருவள்ளூர் பேருந்து நிலையம் வீரராகவ கோயில் அருகே அமைந்துள்ளது. சென்னை, திருத்தணி, திருப்பதி போன்ற நகரங்கள் திருவள்ளூரை இனைக்கின்றன.

வைத்திய வீரராகவ கோயில் அமைவிடம்