அது ஒரு முழுமையான பெண்ணின் அழகு, அவள் மலைகளின் அழகு. அவள் மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படுகிறாள். அவள் மேற்குத் தொடர்ச்சி மலையின் மொழியைய் பேசுகிறாள். கொடை என்பது கொடியிலுருந்து இருந்து வந்த பெயர், கானல் என்பது காடுகளிலிருந்து பெறப்பட்ட பெயர். நாளடைவில் அது கொடைக்கானலாக மாறியது. கொடைக்கானலில் நாம் பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம். கொடைக்கானலில் பார்க்க வேண்டிய 10 சிறந்த இடங்களைப் கீழே கொடுத்துளேன். மேலே கொடுக்கப்பட்டுள்ள படம் அப்பர் லேக் வியூ எனப்படுகிறது. 

1. கொடைக்கானல் ஏரி

கொடைக்கானல் ஏரி கொடை ஏரி என்றும் அழைக்கப்படுகிறது. கொடைக்கானலில் உள்ள புகழ்பெற்ற ஏரிகளில் ஒன்றாக கொடை ஏரி கருதப்படுகிறது. ஏரியைச் சுற்றியுள்ள காடு, சுற்றுலாப் பயணிகளுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. பனிச் சாரல் அவர்களை நன்றாக சுவாசிக்க வழிவகுக்கிறது. தம்பதிகள் படகில் பயணம் செய்யும் போது தங்கள் உணர்வுகளையும், காதலையும் பகிர்ந்து கொள்ள கொடை ஏரி உதவுகிறது. இது தம்பதிகளின் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள உதவுவது மட்டுமல்லாமல், குடும்பம் மற்றும் நண்பர்களின் பயணத்தையும் அதிகரிக்கின்றது. சுற்றுலாப் பயணிகள் அனைவரும் கொடைக்கானலின் அனைத்து இடங்களுக்குச் சென்றுவிட்டு இங்கே இணைகின்றனர். இது கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1கிமீ தொலைவில் அமைந்துள்ளது. ஏரியை பார்வையிட துடுப்பு படகுகள், ஷிகார் படகுகள் மற்றும் பெடல் படகுகள் உள்ளன. கொடைக்கானலின் அழகான மாலைப் பொழுதைக் ஏரியின் அழகை கோலோச்சுகிறது. மேலே உள்ள படம் கொடைக்கானல் ஏரியைக் காட்டுகிறது.
கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி நேரம்
காலை 8.30 முதல் மாலை 6.00 மணிவரை

2. கோக்கர்ஸ் வாக்

மலைகளின் இளவரசி கொடைக்கானல் என்பதை கோக்கர்ஸ் வாக் என்ற இடத்தில உணரலாம். ஏனெனில் நடைபாதையில் செல்லும் போது மலைகள் மற்றும் சமவெளிகளின் அழகை நம்மால் பார்க்க முடியும். இந்த நடைபாதை 1872 இல் லெப்டினன்ட் கோக்கரால் அமைக்கப்பட்டது, அதனால் அந்த இடம் கோக்கர் என்று அழைக்கப்படுகிறது. கோக்கர் நடைபாதையில் நடந்து செல்லும் வழியில் இருந்து பெரியகுளத்தையும் மதுரை நகரையும் பார்க்கலாம். உங்களுக்குப் பிடித்தவரிடம் கைகோர்த்து அழகான காட்சிகளுடன் கோக்கர்ஸ் நடைப்பயணத்தை நிறைவு செய்ய வழி வகுக்கிறது. கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து 650 மீட்டர் தொலைவில் கோக்கர்ஸ் நடை பாதை உள்ளது. கோக்கர்ஸ் நடைபாதை அழகிய மூடுபனியுடன் மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது.
கோக்கர் நடைபாதை நேரம் 
காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணிவரை

3. பிரையன்ட் பூங்கா 

கொடைக்கானல் முழுவதும் மலைகளின் அழகு, கோக்கர்ஸ் நடைபாதை சமவெளியின் அழகு ஆனால் பிரையன்ட் பூங்கா பூக்களின் அழகு. பிரையன்ட் பூங்காவிற்குள் நுழையும் மக்கள், பூக்கள் மற்றும் புல்வெளிகளின் இனிமையான வாசனையை உணர்கிறார்கள். 1908 ஆம் ஆண்டு எச்டி பிரையன்ட் என்பவரால் இந்த பூங்கா திட்டமிடப்பட்டது. பூங்காவின் 20 ஏக்கர் பரப்பளவில் ஆண்டு முழுவதும் முழு மூடுபனி மற்றும் குளிர் நிலவுகிறது. கொடைக்கானல் ஏரியில் இருந்து சில தூரத்தில் பைரன்ட் பூங்கா அமைந்திருப்பதால், பெரும்பாலான மக்கள் கொடை ஏரியல் படகு சவாரி முடித்த பிறகு பூங்காவில் ஓய்வெடுக்க விரும்புகிறார்கள்.
பிரையன்ட் பார்க் நேரம் 
காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை

4. பேரிஜம் ஏரி

கொடைக்கானலில் உள்ள மிகவும் பிரபலமான நீர்த்தேக்கங்களில் ஒன்று பேரிஜம் ஏரி. இது கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 25 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மகிழ்ச்சிக்காக வரும் மக்களுக்கு பசுமையான காட்சி அளிக்கிறது. பேரிஜம் ஏரி வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. மக்கள் வனப்பகுதிக்குள் நுழையும் போது அனுமதி சீட்டு பெற வேண்டும். பேரிஜம் ஏரி காடுகளின் நடுவில் அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதிக்குள் நுழையும் சுற்றுலா பயணிகளுக்கு குளிர்அதிகமாக இருக்கும். பெரிஜம் ஏரி மைக்ரோ நீர்நிலை திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. மேலும் ஏரியின் மேற்பரப்பு மிகவும் தூய்மையானது. மக்கள் அழகான புகைப்படங்களை எடுக்க நல்ல கேமராவுடன் இங்கே செல்ல வேண்டும். பேரிஜம் ஏரியின் பசுமைக் காட்சி மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
பெரிஜம் ஏரி நேரங்கள்
காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை

5. பைன் மரம்

காடு என்பது தேசத்தின் தூண், இது சுற்றுலா செல்லும் மக்களுக்கு அதிக ஆர்வத்தை தருகின்றது. கொடைக்கானலில் அதிகம் பார்வையிடப்படும் சுற்றுலாத் தலங்களில் பைன் மரக் காடுகளும் ஒன்று. இது கொடைக்கானலுக்கு தென்மேற்கே அமைந்துள்ளது. பனிமூட்டம் சூழ்ந்திருக்கும் இடம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் பைன் மரத்தின் நடுவில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். 1906 ஆம் ஆண்டு திரு பிரையன்ட்டின் முயற்சியால் பைன் மரங்கள் நடப்பட்டது. இயற்கையின் அழகை ரசிக்க விரும்புபவர்கள் கொடைக்கானலில் உள்ள பைன் மரங்களை கட்டி தழுவுகின்றனர். பைன் காடு கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. மேலே காட்டப்பட்டுள்ள படம் கொடைக்கானலில் உள்ள பைன் மரத்தைச் சேர்ந்தது.
பைன் ஃபாரஸ்ட் கொடைக்கானல் நேரம் 
காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை

6. தற்கொலை இடம் (Suicide Point)

கொடைக்கானலில் உள்ள உணர்ச்சிகரமான இடங்களில் ஒன்று. இங்கு மேகங்கள் கடந்து செல்வதைக் மட்டுமல்லாமல், இந்த இடத்தில் பல உயிர்கள் சென்றிருப்பதையும் உணர முடிகிறது. இந்த இடம் மிகவும் ஆபத்தான இடங்களில் ஒன்றாகும். தேனிலவு மற்றும் விடுமுறை களங்களில் மகிழ்ச்சிக்காக கொடைக்கானலுக்கு, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பயணம் செய்கிறார்கள், ஆனால் அவர்களில் சிலர் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ள இவ்விடத்தைத் தேர்வு செய்வது வேதனையளிக்கிறது. ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தபோது பாதிக்கப்பட்டவர்கள் எப்படி மன உளைச்சலுக்கு ஆளானார்கள் என்பதை பெரும்பாலான மக்கள் இங்கே உணர்கிறார்கள். கொடைக்கானலில் தற்கொலை செய்யும் இடங்கள் பல்வேறு உள்ளன. அவற்றில் ஒன்று மேலே கொடுக்கப்பட்டுள்ளது.  
7. வட்டக்கானல் நீர்வீழ்ச்சி

வட்டக்கானல் அருவி கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி முழுவதும் காடுகளால் சூழப்பட்டுள்ளது, மலையேற்றம் (Trekking) மூலம் அணுகலாம். வட்டக்கானல் நீர்வீழ்ச்சியிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் தண்ணீரின் சலசலப்பை நாம் உணரலாம். அற்புதமான பறவைகளின் ஒலிகளுடன் இந்த இடம் மிகவும் சுவாரசியமானதாகவும் சிலிர்ப்பானதகாவும் இருந்தது. வாழ்வில் நினைவுகளை தேட நினைப்பவர்கள் வட்டக்கானல் அருவியில் கேமராவை க்ளிக் செய்ய மறக்காதீர்கள். மேலே உள்ள படம் கொடைக்கானலில் உள்ள வட்டக்கானல் நீர்வீழ்ச்சியைக் காட்டுகிறது.

8. La Salette தேவாலயம்

லா சலேட் தேவாலயம் கொடைக்கானலில் உள்ள முதல் கத்தோலிக் தேவாலயமாகும், இது 1866 இல் கட்டப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து 7000 அடிக்கு மேல் உள்ள இந்த தேவாலயம் ஒவ்வொரு நிமிடமும் காலநிலை வேறுபாடுகளைப் பெறுகிறது. இந்த இடம் மிகவும் அமைதியானது மற்றும் இறைவனை மிகவும் ஆழமாக பிரார்த்தனை செய்ய உதவுகிறது. இந்த தேவாலயத்தில் நிறைய சினிமா படப்பிடிப்புகள் நடந்துள்ளன. சுற்றுலாப் பயணிகள் அழகான மூடுபனி வழியாக இறைவனை உணர்கிறார்கள். பிரெஞ்ச் பாணியில் கட்டப்பட்ட இந்த தேவாலயம் வெள்ளை மற்றும் நீல நிறத்தில் காட்சியளிக்கிறது. கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவில் லா சலேட் தேவாலயம் அமைந்துள்ளது. தேவாலயம் மூடுபனியால் சூழ்ந்திருப்பது மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது.

9. டால்பின் மூக்கு

கொடைக்கானலில் அதிகம் பார்வையிடப்படும் மலையேற்ற (Trekking) இடம் இதுவாகும். இது கொடைக்கானலில் மிகவும் ஆபத்தான நடக்கக்கூடிய இடமாகும். டால்பின் மூக்கின் பெயர் ஒரு தட்டையான பாறையிலிருந்து பெறப்பட்டது. பாறையிலிருந்து அற்புதமான வனக் காட்சிகளைக் ரசிக்கலாம். சுற்றுலா செல்லும் மக்கள் மலையேறி டால்பின் பகுதியைய் பார்க்கிறார்கள். கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவில் டால்பின் பகுதி அமைந்துள்ளது. பார்வையாளர்கள் பாதுகாப்பான இடத்தை அடைய சரியான பயண தேவைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். டால்பினின் மூக்கின் நுனி மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது.
டால்பின் நோஸ் நேரம் 
காலை 6.00 மணிமுதல் மாலை 5.30 மணிவரை

10. டெவில்ஸ் கிச்சன்

குணா படம் எடுத்த பிறகு இந்த இடம் குணா குகை என்றும் அழைக்கப்படுகிறது. குணா குகை அருகே செல்லும் போது எந்தப் பிடிப்பும் இல்லாததால், சுற்றுலாவினர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். குணா குகை மூன்று தூண்களால் காணப்படுகிறது. இது 2500 மீட்டர் ஆழத்தில் செல்கிறது. குகைக்குள் நுழைந்த சில சுற்றுலாப் பயணிகள் குகைக்குள் இறந்துள்ளனர். அதுவே பேய்களின் அறை என்பார்கள். கொடைக்கானலில் மிகவும் பயமுறுத்தும் இடங்களில் இதுவும் ஒன்று. கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து 7.5 கிமீ தொலைவில் குணா குகை உள்ளது. குணா குகையில் உள்ள ஆழமான பள்ளத்தாக்கு மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் உள்ள மற்ற சுற்றுலா இடங்கள் 
* குறிஞ்சி ஆண்டவர் கோயில் 
* பியர் சோழா நீர்வீழ்ச்சி  
* பூம்பாறை கிராமம் 
* மன்னவனுர் கிராமம்

குணா குகை நேரம் 
காலை 8.00 மணிமுதல் மாலை 4.30 மணிவரை

கொடைக்கானலுக்குச் செல்ல சிறந்த நேரம்
ஜூலை முதல் அக்டோபர் வரை

கொடைக்கானல் வானிலை
கோடையில் - 20 - 32 டிகிரி செல்சியஸ்
குளிர்காலம் - 12 - 26 டிகிரி செல்சியஸ்

கொடைக்கானலில் உள்ள ஹோட்டல்கள்
கொடை ரிசார்ட் & ஸ்டெர்லிங் கொடை லேக் ரிசார்ட்

கொடைக்கானலில் உள்ள உணவுகள்
அசைவம் - இம்ரான் பிரியாணி
சைவம் - அஸ்டோரியா வெஜ் உணவகம்

குறிப்பு : கொடைக்கானலில் பல ஹோட்டல்கள் மற்றும் உணவுகள் உள்ளன.

கொடைக்கானல்க்கு எப்படி செல்வது.

விமானம் 
கொடைக்கானலுக்கு அருகிலுள்ள விமான நிலையம் 133 கிமீ தொலைவில் உள்ள மதுரை விமான நிலையம் ஆகும்.

ரயில் 
கொடைக்கானலின் அருகிலுள்ள ரயில் நிலையம் பழனி, கொடை ரோடு மற்றும் திண்டுக்கல் ரயில் நிலையம் ஆகும். சென்னையில் இருந்து செல்லும் சில ரயில்கள் கொடை ரோடு ரயில் நிலயித்தில் நிற்கின்றன. பெரும்பாலான ரயில்கள் திண்டுக்கல் ரயில் நிலையத்தால் நிற்கின்றன. பழனி ரயில் நிலையமும் கொடைக்கானல் அருகே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.    

பேருந்து 
சென்னை, திண்டுக்கல், மதுரை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து கொடைக்கானலுக்கு பேருந்து வசதிகள் உள்ளது.


கொடைக்கானல் ஏரி அமைந்துள்ள இடம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.