தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலுக்குச் செல்வதற்காகச் சென்னையிலிருந்து கும்பகோணத்திற்கு உழவன் விரைவு ரயிலில் பயணித்தேன். நாம் ஒரு இடத்திற்குச் செல்வதற்கு முன், அந்த இடத்தை அடைவதற்கு முன் அந்த இடத்தைப் பற்றிச் சிந்திக்கிறோம். நானும் அதை எண்ணினேன். நான் ரயிலில் பயணம் செய்யும்போது தமிழ்நாட்டில் சோழர்களின் சாதனைபற்றி நினைத்துப் பார்த்தேன். முதலாம் ராஜ ராஜ சோழனின் பெரிய கோயில் எனக்கு நினைவுக்கு வந்தது. நான் கும்பகோணத்திற்கு இரண்டாவது முறையாகப் பயணம் செய்த நேரம் அது. இரண்டாம் ராஜ ராஜ சோழன் பற்றிய கட்டுரைகளைப் படிக்கத் தொடங்கினேன். அப்போது தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சிவன் கோயில்கள் சோழர்களால் கட்டப்பட்டவை என்று தெரிந்து கொண்டேன். ரயிலில் கீழ் இருக்கையில் பயணம் செய்து கொண்டே விளக்கை அணைத்தேன் அது என்னை ஆன்மீகப் பயணத்துக்கு வழி வகுத்தது. ரயில் தண்டவாளத்துடன் இணைவது போலச் சோழர்களும் சிவபெருமானுடன் இணைக்கப்பட்டதாக நான் நம்பினேன். ஐராவதேஸ்வரரின் கலையைக் காண என் மனம் காத்திருந்ததால் கும்பகோணத்தை அடைவதற்குள் கண்விழித்தேன். சென்னையிலிருந்து கும்பகோணத்தை அடைய சுமார் ஆறு மணி நேரம் ஆனது. சோழர்கால கட்டிடக்கலையை பார்க்க வேண்டும் என்று ஆர்வப்பட்டேன், தமிழ்நாட்டின் மர்மமான கோயிலைப் பார்க்க விரும்பினேன், இறுதியாகக் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து தாராசுரம் செல்ல மினிபஸ்ஸில் ஏறினேன். அது என்னைத் தமிழ்நாட்டின் உலக பாரம்பரிய தளம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றது. அந்த இடம் மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது. அது தாராசுரம் என்று அழைக்கப்படுகிறது.
ஐராவதேஸ்வரா
சோழர்கள், தமிழகத்தில் வெவ்வேறு காலகட்டங்களிலும் வெவ்வேறு இடங்களிலும் ஆட்சி செய்தனர். அவர்களின் கலை மற்றும் கலாச்சாரத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. ஆனால் உணர்ந்து கொண்டேன். அங்கே கலையோடும் ஆண்டவனோடும் ஒன்றிக்கொண்டிருந்தேன். கட்டிடக்கலையுடன் கலை இணைந்த காலம் சோழன் காலம் என்று நம்பினேன். மேலும், இக்கோயில் சோழர்களின் தலைநகர் பழையராக இருந்தபோது கட்டப்பட்டது. இக்கோயில் இரண்டாம் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டது. வரலாற்றின் படி, ஐராவதம் என்பது இந்திரனின் வாகனமான வெள்ளை யானை. துர்வாச முனிவரின் சாபத்தால் யானையின் நிறம் கருப்பு நிறமாக மாறியதால் இந்தக் கோயில் குளத்தில் நீராட வந்தது. யானை குளித்தபிறகு அதன் இயற்கையான வெள்ளை நிறம் திரும்பியதால் கோயிலில் உள்ள தெய்வம் ஐராவதேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோயில் குளத்தில் யம பகவான் குளித்ததாக மற்றொரு கதையும் உள்ளது. மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ள குதிரை மற்றும் யானை தேரை இழுக்கும் வகையில் கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கோவிலுக்குப் பின்னால் உள்ள மர்மம்
சோழர்கள் கட்டிடக்கலையுடன் தொடர்புடையவர்கள் மட்டுமல்ல, அவர்கள் இசையுடன் இணைந்தனர். கர்நாடக இசையின் அடிப்படைகளை அவர்கள் அறிந்திருந்தனர், அதுதான் கோயிலுக்கு முன்னால் உள்ள ஏழு படிகளைத் ஒவொன்றாகத் தொடும்பொழுது ​​​​ச, ரி, க, ம, ப, த, நி ஆகிய சத்தங்களை ஏற்படுத்துகின்றது. இந்தப் படிகள் மர்மமானவை. இதை மற்ற கோயில்களில் பார்க்க முடியாது. நான் இசையை விரும்பினேன். அந்த இறைவனையும், இசையையும், கட்டிடக்கலையையும் ஒரு கலை வடிவமாக இங்கே உணர்ந்தேன். படிகளிலிருந்து வரும் ஒவ்வொரு ஸ்வர சத்தமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கோயிலின் மர்மமான படிகள் மேலே உள்ள படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
உலக பாரம்பரிய தளம்
இக்கோயில் 2004 ஆம் ஆண்டு உலகப் பாரம்பரியச் சின்னத்தில் சேர்க்கப்பட்டது. இதோடு சோழர் வாழ்ந்த மற்ற கோயில்களும் அடங்கும். கோயிலுக்குச் சென்றபிறகு, இது போன்ற கோயிலை நான் இதுவரை பார்த்ததில்லை என்று உணர்ந்தேன். கோயிலில் உள்ள சிற்பங்கள் விலைமதிப்பற்றவை, இந்தியாவில் உள்ள மற்ற கோயில்களில் பார்க்க முடியாதது. அது தனித்துவமானது! அது எனக்குக் காஞ்சி கைலாசநாதர் கோயிலை நினைவுப்படுத்தியது. இக்கோயிலில் தமிழ்நாட்டுப் பண்பாட்டுச் சிற்பங்கள் பல உள்ளன. சிவபெருமான் ஐராவதேஸ்வரராக வணங்கப்படுகிறார். பெரிய நாயகி, துர்க்கை, நந்தி ஆகிய தெய்வங்களும் உள்ளன. மக்கள் இந்தக் கோயிலுக்குச் செல்லும்போது ​​இறைவனும் கலையும் இங்குச் சங்கமிப்பதாக உணர்கிறார்கள். ஐராவதேஸ்வரரைப் பற்றிய அழகான கனவுகளுடன் ரயிலில் என் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தேன். எனது இருக்கை விளக்கை அணைத்துவிட்டு, ஐராவதேஸ்வரர் கோயிலில் உள்ள சிற்பிகள் எப்படி சிலைகளை உருவாக்கினார்கள் என்று நினைத்துப் பார்த்தேன். மேலே உள்ள படத்தில் கோயிலின் சிலை காட்டப்பட்டுள்ளது.

கோயிலின் சிறப்பு
யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம்  

தாராசுரம் கோயிலின் நேரம் 
காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை

ஐராவதேஸ்வரா கோயிலை எப்படி அடைவது
மாவட்டம் : தஞ்சை
நகரம் : கும்பகோணம்

விமானம்
ஐராவதேஸ்வரர் கோயிலுக்கு அருகில் உள்ள விமான நிலையம் திருச்சி விமான நிலையம் ஆகும், இது 88 கிமீ தொலைவில் உள்ளது.

ரயில்
ஐராவதேஸ்வரர் கோயிலுக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் கும்பகோணம் ரயில் நிலையம் ஆகும், இது 5 கிமீ தொலைவில் உள்ளது. சென்னையிலிருந்து உழவன், சோழன், ராமேஸ்வரம் மற்றும் திருச்செந்தூர் ரயில்கள் கும்பகோணத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

பேருந்து
ஐராவதேஸ்வரர் கோயிலின் அருகில் உள்ள பேருந்து நிலையம் 750 மீட்டர் தொலைவில் உள்ள தாராசுரம் பேருந்து நிலையம் ஆகும். கும்பகோணத்திலிருந்து தாராசுரம் சுமார் 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்விரண்டிற்கும் இடையே நிறைய மினிபஸ்கள் இயக்கப்படுகின்றன.

ஐராவதேஸ்வரர் கோயில் இடம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.