மலைமீது காட்சி தரும் ரங்கநாதர் ஸ்தலமான திருநீர்மலையின் வரலாற்றைப் பற்றிப் பார்த்தோம். இப்பொது, குன்றத்தூர் மலையிலிருந்து காட்சி தரும் முருக பெருமான், வடக்கு திசை நோக்கி அருள் புரிவதை பார்பபோம். குன்றத்தூர் முருகன் கோயிலின் பின்னணியில் உள்ள அற்புதமான வரலாற்றைப் கோயில் கல்வெட்டு எடுத்துச் சொல்கிறது. இந்தக் கோயிலின் சன்னதி தமிழ்நாட்டின் கலாச்சாரத்தைப் போதிக்கின்றது. முருகன் சுப்ரமணிய வடிவில் காட்சியளிக்கிறார். அவர் தன் மனைவி வள்ளி மற்றும் தெய்வானையுடன் அருள்பாலிக்கிறார். ஆனால் நாம் அவரை ஒரு நேரத்தில் ஒரே ஒரு துணையுடன் மட்டுமே பார்க்க முடியும். ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் வாழ வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை இது கற்பிக்கிறது. மேலே உள்ள படம் குன்றத்தூர் கோயிலில் எடுக்கப்பட்டது.

வடக்கு திசையை நோக்கி

தமிழகத்தில் முருகன் கோயில்கள் ஏராளமாக உள்ளது. முருகனின் ஆறுபடை வீடுகளை நாம் அறிவோம். திருத்தணி, சுவாமிமலை, பழனி, பழமுதிர்ச்சோலை, திருச்செந்தூர் மற்றும் திருப்பரங்குன்றம். ஆனால் குன்றத்தூர் முருகன் கோயில் ஆறுபடை வீடுகளிலிருந்து வேறுப்பட்டது. குன்றத்தூர் முருகன் கோயில் வடக்குத் திசை நோக்கி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மற்ற முருகன் கோயில்கள் எதுவும் வடக்கு திசை நோக்கி இல்லை என்பது இங்கே நினைவுக் கூறப்படுகிறது. திருப்பூரிலிருந்து திருத்தணிக்கு வந்த முருகன் குன்றத்தூரில் தங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. குன்றத்தூர் முருகன் கோயில் வடக்கு நோக்கியிருப்பது மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது. 

கோயில் பக்தர்கள் 

குன்றத்தூர் முருகன் கோயில் சுமார் 900 ஆண்டுகளாகப் பக்தர்களால் வழிபடப்படுகிறது. 12ஆம் நூற்றாண்டில் இரண்டாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட இக்கோயில் 1726 ஆம் ஆண்டில் மதுரை நாயக்கரால் மேம்ப்படுத்தப்பட்டது. இக்கோயில் 84 படிகளுடன் கட்டப்பட்டது. முருகன் இரு மனைவிகளுடன் காட்சியளித்தாலும், ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணுடன் வாழப் பக்தர்களுக்குப் போதிக்கிறார். 

குன்றத்தூர் முருகன் கோயில் நேரம் 
காலை 06.00 - மதியம் 01.30 மணிவரை 
மாலை 03.30 - இரவு  08.30 மணிவரை

கோயிலின் சிறப்பு
முருகப்பெருமான் வடக்கு திசை நோக்கி

குன்றத்தூர் முருகன் கோயிலுக்கு எப்படி செல்வது

விமானம்
சென்னை விமான நிலையம் குன்றத்தூர் முருகன் கோயிலிலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது.

ரயில் 
குரோம்பேட்டை ரயில் நிலையம் குன்றத்தூர் முருகன் கோயிலிலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது.

பேருந்து 
சுமார் 1.5 கிமீ தொலைவில் உள்ள குன்றத்தூர் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. சென்னை மற்றும் பிற பகுதிகளிலிருந்து பேருந்துகள் உள்ளன.

குன்றத்தூர் கோயில் அமைந்துள்ள இடம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது