இவ்வுலகில் யார் பிறக்கிறார்களோ அதற்குப் பின்னால் பல கரணங்கள் இருக்கின்றன. இறைவனும் இவ்வுலகில் பிறந்து வளர்ந்ததற்குக் காரணம் இருக்கிறது. இது இறைவனின் அனைத்து அவதாரங்களுக்கும் பொதுவானது. அரக்கர்களின் கொடுமையிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற விஷ்ணு பகவான் எடுத்த பத்து அவதாரங்களைப் பற்றி நாம் அறிவோம். அதே போல் மக்களைப் பல நோய்களிலிருந்து காப்பாற்ற சாய் பாபா அவதரித்தார். சாயிபாபா பிராமண குடும்பத்தில் பிறந்தாலும் மொழி, மதம், ஜாதி கடந்து அனைவரும் அவர் சமமாகக் கருதப்படுகிறார். மேலே உள்ள படம் மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா என்று அழைக்கப்படுகிறது.  
கோயில் கோபுரம் வழியாகச் சாய்பாபா மந்திரங்கள் 

புவியியல் ரீதியாக, ஷீரடி நகராட்சி மன்றத்தால் நிர்வகிக்கப்பட்டாலும், அது பக்தியுடன்  சூழப்பட்டு வருகின்றது. பக்தர்களால் சாய்பாபா மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றது. ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு வரும் பக்தர்கள் நோய்களிலிருந்து விடுபடுகிறாரகள். சாய்பாபா தனது 16வது வயதில் ஷீரடிக்கு வந்ததிலிருந்து மக்களின் நோய்களையும், பிரச்சனைகளையும் தீர்க்கிறார். சாய்பாபா மந்திரங்கள் பிரபஞ்சத்தைத் நிர்வகிக்கும் என்று பெரும்பாலான பக்தர்கள் நம்புகிறார்கள். சிறிய வேப்ப மரத்திலிருந்து தொடங்கப்பட்ட இந்தக் கோயில் உலகம் முழுவதும் உள்ள சாய்பாபா பக்தர்களை ஒன்றிணைகிறது. மேலே உள்ள படம் ஷீரடி சாய்பாபா கோயிலின் கோபுரத்தைக் காட்டுகிறது.
சாய்பாபாவின் கருணை

சாய்பாபா இந்து மற்றும் முஸ்லீம் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர், எனவே அவர் குரான் மற்றும் பகவத் கீதையைப் பின்பற்ற விரும்பினார். வேப்ப மரத்தடியில் சாய்பாபா அமர்ந்திருந்தபோது, ​​மக்களிடம் அவைகளை எடுத்துச் சென்றார். சோகத்துடன் வந்த மக்களை அரவனித்தார், சாய்பாபா நோய்களிலிருந்து மக்களைக் குணம்மாக்கினார். அவர் அவர் குல தெய்வத்தின் மந்திரத்தை உச்சரிக்கச் சொன்னார். பசியுடன் வந்தவர்களுக்கு உணவுகளை வழங்குவதே சாய்பாபாவின் கொள்கையாக இருந்தது. இது இன்றும் சாய்பாபா கோயில்களில் பின்பற்றப்படுகிறது. மேலே உள்ள படம் சாய்பாபாவின் கருணையைக் காட்டுகிறது.
சாய்பாபாவின் அற்புதங்கள்

சாய்பாபா கோயில்கள், மந்திரங்கள், புகைப்படங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது, இதைக் கோயில்களில் மட்டுமல்லாமல், வீடுகளிலும், வாகனங்களிலும், பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றிலும் காணமுடிகிறது. ஒவ்வொருவரும் சாய்பாபாவின் ஆசி பெற விரும்புகின்றனர், சாய்பாபா படங்களளைய் பக்தர்கள் பகிர விரும்புகிறார்கள். சாய்பாபா படம் கேலரியில் சேமிக்க படுகின்றது. சாய்பாபாவை குரு என்று போற்றுவதால் சில பக்தர்கள் சாய்பாபாவை 
வியாழன் அன்று வழிபட விரும்புகிறார்கள். சாய்பாபா கோவயிலின் முக்கிய மங்களங்களில் ஒன்று, அதிகாலையில் காகத் ஆரத்தி, மதியம் மத்திய ஆரத்தி, மாலையில் தூப் ஆரத்தி கடைசியாக இரவு ஷென் ஆரத்தி. அவர் பத்ரி கிராமத்தில் பிறந்தாலும், அவர் இந்தியா முழுவதும் போற்றப்பட்டு வருகிறார், 20 ஆம் நூற்றாண்டில் அவர் இறுதி மூச்சு விட்டாலும், அவர் இன்றும் மக்களிடையில் வாழ்ந்து வருகின்றார். ஷீரடியில் அவரது மந்திர நிகழ்வுகளைப் பக்தர்கள் இன்றும் புகழ்ந்து பேசுகின்றனர். மருத்துவர்களால் குணமாகாத நோய்களும் சாய்பாபாவால் குணமாகிறது. கிரகங்களால் ஏற்படும் பிரச்சனைகளும் சாய்பாபாவால் தீர்க்கப்படுகின்றது. இறுதியாக ஷீரடி சாய்பாபா நோயாளிகளுக்கு மருந்து. உங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு. மேலே உள்ள படம் மச்சிலிப்பட்டினம் சாய்பாபா கோவயிலைக் காட்டுகிறது.

அமைந்திருக்கும் மாநிலம் - மஹாராஷ்டிரா 
அமைந்திருக்கும் மாவட்டம் - அஹமத்நகர்     

ஷீரடி சாய்பாபா கோயில் நேரம் 
காலை 4.00 மணிமுதல் இரவு 11.00 மணிவரை 

ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு எப்படி செல்வது.

விமானம் 
ஷீரடி சாய்பாபா கோயிலுக்குஅருகில் உள்ள விமான நிலையம் 15 கிமீ தொலைவில் உள்ள ஷீரடி விமான நிலையம் ஆகும்.

ரயில் 
ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் ஷீரடி சாய்நகர் ரயில் நிலையம் ஆகும், இது 3 கிமீ தொலைவில் உள்ளது. மற்ற நகரங்களிலிருந்து ரயில்கள் உள்ளன. சென்னையிலிருந்து ஷீரடிக்கு வாராந்திர ரயில் உண்டு.

பேருந்து 
ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு அருகில் உள்ள பேருந்து நிலையம் சாய்பாபா பேருந்து நிலையம் ஆகும், இது 4 கிமீ தொலைவில் உள்ளது. மற்ற நகரங்களிலிருந்து ஷீரடிக்கு நிறைய பேருந்துகள் உள்ளன.

ஷீரடி சாய்பாபா கோயில் அமைந்துள்ள இடம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது