சென்னை மெரினா கடற்கரையில் நடக்கும்போது, கரையிலிருந்து வெளியேற முடியாமல் அங்கு நடந்த நிகழ்வுகளை நினைத்துப் பார்த்தேன். இந்தியாவின் மிக நீளமான கடற்கரை மெரினா என்பதை மட்டும் நினைத்து என்னால் கடந்து செல்ல முடியவில்லை. அலைகள் என் முன்னே வந்து திரும்பும்போது, ​​அது கடந்து வந்து பார்த்த சம்பவங்கள் என்ன என்பதை எனக்கு நினைவுப்படுத்தியது. சென்னை மெரினாவில் ஒரு சிறுவன் அலையில் நீந்துவதைக் கடந்த ஒரு தருணம் மேலே உள்ள படம் காட்டுகிறது. சென்னை மெரினா என்று பொதுவாக அழைக்கப்படும் இந்தியாவின் மிக நீளமான கடற்கரையின் நினைவுகளை இன்று நாம் காண்கிறோம்.
ஒவ்வொரு நபருக்கும் தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் எண்ணங்கள் உள்ளன. மெரினாவும் அதன் சொந்த எண்ணங்கள், வெளிப்பாடுகள், சம்பவங்கள் மற்றும் அனுபவங்களைக் கடந்து வந்திருக்கிறது. மெரினா கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தகத்தை மட்டும் பார்க்காமல், ஜல்லிக்கட்டு தடையைத் திரும்பப் பெரும் இடமாகவும் இருந்திருக்கிறது. நமது கலாச்சாரத்துக்காக நாம் பாடுபட்டோம் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டியது. கலாச்சாரம் மட்டுமின்றி, தமிழகத்தின் முதல்வர்களையும், செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளையும் மெரினா தீர்மானித்துள்ளது, ஏனெனில் அவர்களின் மாநாடு இங்கு நடைபெற்றது. மேலும், இங்கிருக்கும் அலைகளும் காற்றும் தமிழக அரசியல் வேறுபாட்டினை சந்தித்துள்ளது. வங்காள விரிகுடாவுடன் இணைந்து மெரினாவை பார்க்கும்போது மக்கள் மனதிலும் இதயத்திலும் கவிதை பிறக்கிறது. அது  கீழே கொடுக்கப்பட்டுள்ள பாரதியாரின் பாடல் வரிகளை நினைவுபடுத்துகிறது.

வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்.

இதன் பொருள் வங்காள விரிகுடா நீரால் நடுத்தர நாடுகளில் பயிர்கள் செய்வோம் என்பதே. இங்கிருந்து அதிகம் சாதித்தவர்கள், சென்னையுடன் இணைந்து மெரினாவின் கலாச்சாரத்தைப் பற்றி உலகிற்கு குறிப்பாகத் தென்கிழக்கு ஆசியாவிற்கு கற்றுக்கொடுக்கிறார்கள். மேலும், பெரும்பாலான இந்தியர்கள் உலகை நிர்வகித்து வருகின்றனர். அவ்வையார் கூறியது போல்.
திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு
அதாவது, கடல் கடந்து செல்வத்தைத் தேடுங்கள் என்பதே அதற்குப் பொருள். வாழ்க்கையின் அடிப்படையான கடின உழைப்பு அது ஒற்றுமையின் வெற்றியின் மூலம் உள்ளது என்பதை மெரினா நுழைவாயிலில் உள்ள சிலைகள் எடுத்துரைக்கிறது. 


மெரினாவின் நினைவுகள்

சென்னை மெரினாவை சுற்றிலும் பல இடங்கள் உள்ளன. சென்னை மெரினாவுக்கு வருபவர்கள் வங்காள விரிகுடாவில் குளிப்பது மட்டுமின்றி, மற்ற நினைவிடங்களையும் பார்க்கச் செல்கின்றனர். மெரினா கடற்கரையில் நிற்கும்போது அதன் அனுபவங்களைப் பார்த்தோம். ஆனால் மெரினாவின் நினைவிடத்தைப் பார்வையிடுவது, வாழ்வின் கொள்கைகளைப் பெறுவதற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இங்கு அடக்கம் செய்யப்பட்ட மாண்புமிகு அரசியல்வாதிகள் வாழ்வியல் கொள்கைகளைத் தங்கள் நினைவிடம் மூலம் மக்களுக்குப் போதித்து வருகின்றனர். தமிழ்நாட்டின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவர் சி.என்.அண்ணாதுரை. அவர் அறிஞர் அண்ணா என்று அழைக்கப்படுகிறார். திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணாதுரையால் உருவாக்கப்பட்டது. அப்போது பெரும்பாலான கட்சிகள் திமுக கட்சியில் இருந்துதான் சொந்தக் கட்சி தொடங்கினர். அண்ணாவின் பேச்சும், எழுத்துத் திறமையும் மக்களிடம் பரவி மாபெரும் வெற்றி பெற்றது. தமிழக முதலமைச்சராகப் பதவி வகித்தபோது அவர் காலமானார். அன்னாவின் இறுதிச் சடங்கு கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுளது. அது மெரினாவோடு தொடர்புடையது.

டாக்டர் கலைஞரின் நினைவகம்   

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நினைவிடத்தை பார்க்கும்போது. கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரது வாக்கியத்தை இங்கே வருபவர்கள் நினைவுக்கூறுகின்றனர்.

தமிழர்களே தமிழர்களே! நீங்கள் என்னைக் கடலில் தூக்கி போட்டாலும் நான் கட்டுமரமாகத் தான் மிதப்பேன், அதில் நீங்கள் ஏறிப் பயணம் செய்யலாம், மூழ்கிவிட மாட்டேன்.

அவர் மேலே உள்ள வாக்கியத்தில் கடல் என்று குறிப்பிட்டுயிருப்பது மெரினா கடற்கரையாக இருந்திருக்குமோ என்பதே என்னை இங்கே நினைவு கூற வைத்தது. ஏன் என்றால் அவர் இங்கே ஓய்வு எடுக்க விரும்பினார் அல்லவா?  
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் பிறந்தாலும், தன் குருவான அறிஞர் அண்ணாவிடம் இளைப்பார விரும்பினார். டாக்டர் கலைஞர் என்று மக்களால் அழைக்கப்படுகிறார். அவர் எழுதும் பேனா தமிழ்நாட்டின் தலைவிதியை மாற்றியிருக்கிறது. அந்த எழுத்துகள் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை நினைவுப்படுத்துகிறது. சென்னையில் உள்ள அவரது பாலங்கள் வழியாகத் தமிழர்கள் அவருடன் இணைகிறார்கள். மெரினா நினைவகம் கலைஞரின் சாதனைகளைச் சொல்கிறது.

பாரத ரத்னா எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர். இந்த மூன்றெழுத்து தெரியாதவர்களே தமிழகத்தில் இல்லை என்றே சொல்லலாம். தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான அரசியல்வாதிகளில் ஒருவர் டாக்டர் எம்ஜி ராமச்சந்திரன் அவர்கள். அவரது மத்தியம் சத்துணவு திட்டம் இன்றும் தமிழக மக்களால் பாராட்டப்படுகிறது. தமிழகத்திற்கு அவர் ஆற்றிய சிறந்த சேவைக்காக இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது. அமெரிக்காவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், தனது சொந்தக் கட்சியான அ.தி.மு.க மூலம் தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெற்றார். (அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்). எம்.ஜி.ஆரின் மூன்றெழுத்துகள் தமிழக மக்களை விட்டு நீங்குவதில்லை, மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவகம் அவர் தமிழ்நாட்டிற்கு செய்த சேவையை எப்போதும் குறிப்பிட்டுக்கொண்டேயிருக்கிறது. 

இரும்பு பெண்மணி அம்மா

வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும்போது நாம் புறக்கணிக்கிறோம். ஆனால் டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் தனது குழந்தைப் பருவத்திலிருந்தே வாழ்க்கையில் பிரச்சனைகளைச் சந்தித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒருமுறை, "நான் பல பிரச்சனைகளைத் தாண்டி இங்கு வந்துதிருக்கிறேன் என்று கூறியுள்ளார். எம்.ஜி.ஆர் அ.தி.மு.க. கட்சியைத் தொடங்கினார், ஆனால் ஜெயலலிதா அவர்கள் அதைக் காப்பாற்றினார். மாணவர்களுக்கு மடிக்கணினி, சைக்கிள் வழங்கினார். அவரது தொட்டில் குழந்தை திட்டம் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இந்தத் திட்டம் அவருக்குப் பின்னர் அம்மா என்ற பெயரைக் கொண்டு வந்தது. அம்மா சத்தம் சென்னை மெரினா முழுவதும் எப்போதும் கேட்கும்.

மெரினா சங்கமம்

மெரினா, மக்களுக்கு வாழ்க்கையின் பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது. மெரினா கடற்கரையின் முக்கியத்துவம் நாம் தனியாகக் கரையில் நிற்கும்போது உணர்கிறோம். மெரினா கடற்கரையில் வரும் அலைகள் அவளுடைய அனுபவங்களை எனக்குக் கற்றுக் கொடுத்தன.

சென்னை மெரினா கடற்கரையை எப்படி அடைவது

விமானம் 
சென்னை மெரினா கடற்கரையிலிருந்து, 21 கிமீ தொலைவில் சென்னை விமான நிலையம் உள்ளது.

ரயில் 
சென்னை மெரினா கடற்கரைக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் 700 மீத்தொலைவில் உள்ள டிரிப்ளிகேன் ரயில் நிலையம். மேலும் கலங்கரை விளக்கம், சேப்பாக்கம் ஆகியவை அருகில் உள்ள ரயில் நிலையங்கள் ஆகும். சென்னை சென்ட்ரலிலிருந்து மேற்கண்ட நிலையங்களுக்கு ரயில்கள் கிடைக்கும்.

பேருந்து 
சென்னை மெரினா கடற்கரைக்கு நிறைய MTC பேருந்துகள் உள்ளன, சென்னை மெரினா கடற்கரையின் அருகில் உள்ள பேருந்து நிலையம் அண்ணா சதுக்கம், CMBT பேருந்து நிலையம். சென்னை வட்டாரத்திலிருந்து அண்ணா சதுக்கத்திற்கு நிறைய பேருந்துகள் உள்ளன.

சென்னை மெரினா கடற்கரை அமைந்துள்ள இடம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.