கொடைக்கானல் ஏரி கொடை ஏரி என்றும் அழைக்கப்படுகிறது. இது கொடைக்கானலில் மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றாகும். கொடைக்கானலில் உள்ள அனைத்து இடங்களையும் பார்வையிட்டபிறகு மக்கள் கொடை ஏரிக்கு வருகிறார்கள். வழிகாட்டிகள் இறுதியாக இந்த இடத்தில் தங்கள் சுற்றுலாப் பயணிகளை இறக்கிவிடுகிறார்கள். கொடை ஏரி காலை 8.30 மணி முதல் மாலை 6.00 மணிவரை திறக்கப்படுகிறது. பெடலிங் மற்றும் ரோ ரோப்படகுகள் மூலம் மக்கள் ஆர்வத்துடன் படகு சவாரி செய்கிறாரகள்.
படகில் பயணம் செய்யும்போது பார்வையாளர்கள் தண்ணீரின் புத்துணர்ச்சியையும், மூடுபனியின் அமைதியையும் உணர்கிறார்கள். அற்புதமான மூடுபனி மற்றும் அழகான மழை பொழிவதைக் காண்கிறாரகள். 
படகில் பயணம் செய்யும்போது குழந்தைகள் அதிகம் மகிழ்கிறார்கள், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் முகத்தைப் பார்க்கும்போது மகிழ்ச்சி அடைகிறார்கள்.

La Saletechurch, Berijam ஏரியின் இடங்களைப் பார்த்தோம். குறிப்பாகக் கொடைக்கானல் ஏரி, கொடைக்கானல் பயணம் முடியும் வரை என்னோடு தொடர்பில் இருப்பதாக உணர்ந்தேன். அதோடு என்னை இணைத்துக் கொண்டேன்.