திருச்செந்தூருக்கு தினமும் ரயில்கள் இயக்கப்பட்டாலும் சென்னை எழும்பூரிலிருந்து நேரடியாக ஓரே ஒரு ரயில் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. தற்போது எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் வண்டி எண் 20605 தாம்பரத்திலிருந்து மாலை 4.27 மணிக்கு புறப்பட்டு திருச்செந்துருக்கு செல்லும் என்றும், இதே போல் வண்டி எண் 20606 திருச்செந்தூரிலிருந்து புறப்பட்டு காலை 10.00 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் எழம்பூர்-திருச்செந்தூர் அதிவேக ரயிலானது தாம்பரம் - திருச்செந்தூர் அதிவேக ரயிலாக 18.8.2025 அன்று வரை மாற்றப்பட்டுள்ளது. இதே போன்று கொல்லம், தேஜஸ், மன்னார்குடி, குருவாயூர் ஆகிய ரயில்களும் தற்காலிகமாக தாம்பரத்திலிருந்து புறப்படுகிறது.
முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூருக்கு உலகம் முழுவதுமிருந்து பல பக்தர்கள் வருகை தந்தாலும் சென்னையிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர், அப்படி செல்பவர்கள் சாலை, பேருந்து மற்றும் ரயில் வழியாக திருச்செந்தூரை அடைகின்றனர், குறிப்பாக ரயிலில் ஏராளமான பேர் பயணம் செய்கின்றனர்.